தமிழ் படத்தின் டிஜிட்டல் உரிமையை ரூ.125 கொடுத்து வாங்கியதா அமேசான்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழில் பிரமாண்டமாக தயாராகி வரும் திரைப்படம் ஒன்றின் டிஜிட்டல் உரிமையை மட்டும் 125 கோடி ரூபாய் கொடுத்து அமேசான் நிறுவனம் வாங்கி இருப்பதாக கூறப்படுவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
’புஷ்பா’, ’ஆர்.ஆர்.ஆர்’. ’கேஜிஎப் 2’ ஆகிய பிரம்மாண்டமான படங்களை அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கும் திரைப்படம் மணிரத்னம் இயக்கிவரும் ’பொன்னியின் செல்வன்’. இந்த படத்தின் முதல் பாகம் செப்டம்பர் 30ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆக உள்ளது. தமிழ் உள்பட பல மொழிகளில் பான் - இந்திய திரைப்படமாக ரிலீசாகவிருக்கும் இந்த படத்திற்கு மிகப்பெரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் ’பொன்னியின் செல்வன்’ பாகம் 1 மற்றும் 2 ஆகிய இரண்டு பாகங்களின் டிஜிட்டல் ரிலீஸ் உரிமைகளை அமேசான் ப்ரைம் நிறுவனம் 125 கோடி ரூபாய் கொடுத்து வாங்கியதாக கூறப்படுகிறது. தமிழ் திரைப்படம் ஒன்று 125 கோடி ரூபாய்க்கு டிஜிட்டல் உரிமை மட்டுமே விற்பனை ஆகி இருப்பது பெரும் ஆச்சரியத்தை அளித்துள்ளது. மேலும் இந்த படத்தின் 2 பாகங்களின் மொத்த பட்ஜெட் ரூபாய் 500 கோடி என்று கூறப்படும் நிலையில் அவற்றில் 25% டிஜிட்டல் உரிமையிலிருந்து மட்டுமே தயாரிப்பாளருக்கு கிடைத்துவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout