ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த மாஸ் நடிகரின் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரின் படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பதும் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’வாத்தி’ திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ’வாத்தி’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூபாய் 8 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், 3 நாட்களில் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், ஒரே வாரத்தில் 75 கோடி வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 20 நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் தற்போது 100 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
ஏற்கனவே தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை எட்டிய நிலையில் தற்போது ’வாத்தி’ திரைப்படமும் 100 கோடி வசூல் செய்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படத்தில் தனுஷ், சம்யுக்தா, சாய்குமார், சமுத்திரகனி, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Love for #Vaathi / #SIRMovie is UNSTOPPABLE ❤️
— Sithara Entertainments (@SitharaEnts) March 4, 2023
The film has crossed a massive 1️⃣0️⃣0️⃣ crores gross worldwide 🌎
Thank you all for the phenomenal support 😇@dhanushkraja #VenkyAtluri @iamsamyuktha_ @gvprakash @dopyuvraj @NavinNooli @vamsi84 @SitharaEnts @7screenstudio pic.twitter.com/GOKevvLQo4
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments