ரூ.100 கோடி கிளப்பில் இணைந்த மாஸ் நடிகரின் படம்.. அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Saturday,March 04 2023]

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவரின் படம் சமீபத்தில் வெளியான நிலையில் அந்த படம் ரூபாய் 100 கோடி வசூல் செய்திருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழ் திரை உலகின் மாஸ் நடிகர்களில் ஒருவர் தனுஷ் என்பதும் அவரது நடிப்பில் சமீபத்தில் வெளியான ’வாத்தி’ திரைப்படம் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் ’வாத்தி’ திரைப்படம் முதல் நாளிலேயே ரூபாய் 8 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், 3 நாட்களில் 40 கோடி ரூபாய் வசூல் செய்ததாகவும், ஒரே வாரத்தில் 75 கோடி வசூல் செய்ததாகவும் தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி 20 நாட்கள் மட்டுமே ஆகியிருக்கும் நிலையில் தற்போது 100 கோடி ரூபாய் வசூல் செய்து விட்டதாக இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனமான சித்தாரா என்டேர்டைன்மென்ட் நிறுவனம் தனது ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

ஏற்கனவே தனுஷ் நடித்த ’திருச்சிற்றம்பலம்’ திரைப்படம் 100 கோடி ரூபாய் வசூல் என்ற சாதனையை எட்டிய நிலையில் தற்போது ’வாத்தி’ திரைப்படமும் 100 கோடி வசூல் செய்துள்ளதை அடுத்து அவரது ரசிகர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

25 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாரான இந்த படத்தில் தனுஷ், சம்யுக்தா, சாய்குமார், சமுத்திரகனி, ஆடுகளம் நரேன், இளவரசு, மொட்ட ராஜேந்திரன் உள்பட பலர் நடித்திருந்தனர். இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 

More News

விராட் கோலியை மணக்க நினைத்த வீராங்கனை…. ஒருபாலின காதலியோடு நிச்சயதார்த்தம்!

இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியில் இடம்பெற்ற பிரபல வீராங்கனையான டேனியல் வியாட்

முதலிரவு புகைப்படங்களை பதிவு செய்த தனுஷ் பட நடிகை: நெட்டிசன்களின் ரியாக்சன்..!

 தனுஷ் படத்தில் நடித்த நடிகை ஒருவர் சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் தனது முதல் இரவு அறையின் புகைப்படங்களை இன்ஸ்டாகிராமில் பதிவு செய்திருப்பதை அடுத்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

பிறந்த நாளில் காதலரை அறிமுகம் செய்த சன் டிவி சீரியல் நடிகை.. குவியும் வாழ்த்துக்கள்..!

சன் டிவி சீரியலில் நடித்து வரும் நடிகை ஒருவர் தனது பிறந்த நாளில் காதலரை ரசிகர்களுக்கு அறிமுகம் செய்து வைத்து புகைப்படங்களையும் பதிவு செய்துள்ள நிலையில் அவருக்கு ரசிகர்களின் வாழ்ந்து குவிந்து

'பொன்னியின் செல்வன் 2' படத்தில் ஒரு பாடல் பாடியுள்ளேன்.. பிரபல பாடகியின் அறிவிப்பால் ரசிகர்கள் குஷி..!

 மணிரத்னம் இயக்கத்தில் உருவான 'பொன்னியின் செல்வன்'  திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்ற நிலையில் இந்த படத்தின் இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது

சூப்பர் சிங்கர் மேடையில் டிஜேவுக்கு டோஸ் விட்ட பூஜாவின் அம்மா.. உண்மையா? பிராங்க்கா?

விஜய் டிவியின் பல நிகழ்ச்சிகளை சுவாரசியப்படுத்துவது டிஜே பிளாக் என்பதும் அவரது டைமிங் காமெடி மிகப் பெரிய அளவில் ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.