தமிழ்க்கடல் என்று அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் மறைவு: பிரபலங்கள் இரங்கல்!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் கடல் என்று அழைக்கப்பட்ட நெல்லை கண்ணன் உடல்நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி இன்று காலமானார். அவருக்கு வயது 77.
திருநெல்வேலி மாவட்டத்தை சேர்ந்த நெல்லை கண்ணன் பல்வேறு இலக்கிய மேடைகளில் பேசியவர் என்பதும் காமராஜர் மீது பற்றுக் கொண்டு பல ஆண்டுகளாக காங்கிரஸ் கட்சியில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. அவருடைய தமிழ் பேச்சிற்கு ஏராளமான ரசிகர்கள் உண்டு என்பதும் அவருடைய பட்டிமன்றம் மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவு மற்றும் வயது மூப்பு காரணமாக எந்தவித நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ளாமல் இருந்த நெல்லை கண்ணன் இன்று உடல்நலக்குறைவால் காலமானார்
நெல்லை கண்ணன் மறைவிற்கு திரையுலகப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், இலக்கியவாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். நெல்லை கண்ணன் மறைவிற்கு கவிப்பேரரசு வைரமுத்து அவர்கள் தனது டுவிட்டரில் இரங்கல் தெரிவித்து பதிவு செய்து இருப்பதாவதுள்
தமிழறிஞர்
நெல்லை கண்ணன் மறைவு
நெடுந்துயரம் தருகிறது
சங்க இலக்கியம் சாற்றியவர்
கம்பரைக் காட்டியவர்
பாரதியைப் போற்றியவர்
பாவேந்தரை ஏற்றியவர்
கண்ணதாசனை நாட்டியவர்
மறைந்துற்றார்
யார் அவர்போல்
பேசவல்லார்?
அவர்போன்ற
எள்ளல்மொழி வள்ளல்
இனி எவருளார்?
ஏங்குகிறேன்;
இரங்குகிறேன்
தமிழறிஞர்
— வைரமுத்து (@Vairamuthu) August 18, 2022
நெல்லை கண்ணன் மறைவு
நெடுந்துயரம் தருகிறது
சங்க இலக்கியம் சாற்றியவர்
கம்பரைக் காட்டியவர்
பாரதியைப் போற்றியவர்
பாவேந்தரை ஏற்றியவர்
கண்ணதாசனை நாட்டியவர்
மறைந்துற்றார்
யார் அவர்போல்
பேசவல்லார்?
அவர்போன்ற
எள்ளல்மொழி வள்ளல்
இனி எவருளார்?
ஏங்குகிறேன்;
இரங்குகிறேன் pic.twitter.com/2ZzRjKNsQ8
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout