தொல்லியல் துறை தகுதிப் பட்டியலில் தமிழை ஏற்றம்பெற வைத்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி!!!
Send us your feedback to audioarticles@vaarta.com
தொல்லியல் துறை வழங்கும் 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தமிழையும் இணைத்துக் கொள்ளுமாறு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பிரதமரிடம் கோரிக்கை வைத்து இருந்தார். தொல்லியல் துறை வழங்கும் 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்புக்கான தகுதிப் பட்டியலை கடந்த சில தினங்களுக்கு முன் தொல்லியல் துறை வெளியிட்டு இருந்தது. அதில் மூத்த மொழியான தமிழ் இடம் பெறவில்லை. இதற்கு பல்வேறு தரப்புகளில் இருந்து எதிர்ப்புகள் கிளம்பின.
அதையடுத்து தகுதிப் பட்டியலில் சமஸ்கிருதம், பாலி, பிராகிருதம், அரபி, பாரசீகம் ஆகிய செம்மொழிகள் இடம்பெற்று இருக்கின்றன. இவற்றுக்கு எல்லாம் மூத்த மொழியான தமிழுக்கு உரிய இடம் கொடுக்கப்பட வில்லை. எனவே தமிழையும் இணைத்துக் கொள்வது கட்டாயம் என தமிழக முதல்வர் தனது கோரிக்கையில் சுட்டிக் காட்டியிருந்தார். மேலும் இந்தியாவில் இதுவரை 38 ஆயிரம் கல்வெட்டுகள் கிடைத்து இருக்கின்றன. அந்த கல்வெட்டுகளில் 28 ஆயிரம் கல்வெட்டுகள் தமிழிலேயே இருக்கிறது. அத்தகைய மூத்த மொழியான தமிழ் தகுதிப் பட்டியலில் இடம்பெறாதது வருத்ததைத் தருவதாக முதல்வர் குறிப்பிட்டு இருந்தார்.
அந்தக் கோரிக்கையை ஏற்று தற்போது தொல்லியல் துறை புதிய அறிவிப்பை வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பில் முதுகலைப் பட்டயப் படிப்புக்கான தகுதிப் பட்டியலில் தமிழும் இடம் பெற்று இருக்கிறது. தமிழக முதல்வரின் கோரிக்கையை ஏற்று தமிழுக்கு முன்னுரிமை வழங்கியதற்காக தொல்லியல் துறைக்கு தமிழக அரசு சார்பில் நன்றி தெரிவிக்கப் பட்டது. மேலும் தனது கோரிக்கையை ஏற்று தொல்லியல் துறையில் மாற்றம் கெண்டு வரப்பட்டுள்ளதால் அதிமுக தொண்டர்கள் தற்போது பெரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தற்போது வெளியிடப்பட்டுள்ள புதிய அறிவிப்பால் தமிழில் முதுகலைப் பட்டம் முடித்தவர்களும் இந்தியத் தொல்லியல் துறை வழங்கும் 2 ஆண்டு முதுகலைப் பட்டயப் படிப்பில் சேர்ந்து படிக்கலாம். மேலும் தொல்லியல் துறையின் புதிய அறிவிப்பில் தமிழ் முன்னுரிமை தகுதியைப் பெற்று இருப்பதைக் குறித்து தமிழக முதல்வர் தனது மகிழ்ச்சியையும் வெளிப்படுத்தி உள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout