கோவின் இணையதளம்... புறக்கணிக்கப்பட்ட தமிழ்மொழி... தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்...!
Send us your feedback to audioarticles@vaarta.com
கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் மத்திய அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.
மத்திய அரசு சார்பாக கொரோனா தடுப்பூசியை பதிவு செய்வதற்கு கோவின் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி போட விருப்பமுள்ள 14 வயது முதல் 44 வயதிட்குட்பட்ட அனைவரும், பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கோவின் தளம் துவங்கப்பட்ட ஆரம்ப காலத்தில், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே இருந்தது. இந்தநிலையில் இன்று மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, கன்னடா மற்றும் ஒரியா உள்ளிட்ட 9 மாநில மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இத்துணை மொழிகள் சேர்க்கப்பட்டாலும், உலகத்தின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படாதது சமூக, தமிழ் ஆர்வலர்கள், கட்சித்தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில், பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் உட்பட பலரும் மத்திய அரசிற்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.
இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மொழிகளில் கோவின் இணையதளம் செயல்பட்டுவருகிறது. ஆனால் நம் தொன்மை மொழியான தமிழ் மட்டும் இல்லாததால், பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மதுரை எம்.பி.வெங்கடேசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout