கோவின் இணையதளம்... புறக்கணிக்கப்பட்ட தமிழ்மொழி... தமிழ் ஆர்வலர்கள் கண்டனம்...!

  • IndiaGlitz, [Friday,June 04 2021]

கொரோனா தடுப்பூசி பதிவு செய்யும் கோவின் இணையதளத்தில், தமிழ் மொழி புறக்கணிக்கப்பட்டதை தொடர்ந்து, சமூக ஆர்வலர்கள் மத்திய அரசிற்கு கண்டனத்தை தெரிவித்துள்ளனர்.

மத்திய அரசு சார்பாக கொரோனா தடுப்பூசியை பதிவு செய்வதற்கு கோவின் என்ற இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. இதில் தடுப்பூசி போட விருப்பமுள்ள 14 வயது முதல் 44 வயதிட்குட்பட்ட அனைவரும், பதிவு செய்யலாம் எனக் கூறப்பட்டுள்ளது. கோவின் தளம் துவங்கப்பட்ட ஆரம்ப காலத்தில், ஆங்கிலம், ஹிந்தி மொழிகளில் மட்டுமே இருந்தது. இந்தநிலையில் இன்று மராத்தி, மலையாளம், பஞ்சாபி, தெலுங்கு, குஜராத்தி, அஸ்ஸாமி, பெங்காலி, கன்னடா மற்றும் ஒரியா உள்ளிட்ட 9 மாநில மொழிகளும் இணைக்கப்பட்டுள்ளது. இத்துணை மொழிகள் சேர்க்கப்பட்டாலும், உலகத்தின் மூத்த மொழியான தமிழ் சேர்க்கப்படாதது சமூக, தமிழ் ஆர்வலர்கள், கட்சித்தலைவர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனால் இச்சம்பவம் சமூகவலைத்தளங்களில், பூதாகரமாக வெடித்துள்ளது. இதனால் பொதுமக்கள் உட்பட பலரும் மத்திய அரசிற்கு கண்டனத்தை தெரிவித்து வருகிறார்கள்.

இந்தியாவில் உள்ள பெரும்பான்மை மொழிகளில் கோவின் இணையதளம் செயல்பட்டுவருகிறது. ஆனால் நம் தொன்மை மொழியான தமிழ் மட்டும் இல்லாததால், பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து மதுரை எம்.பி.வெங்கடேசன் கடும் கண்டனத்தை தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

 

More News

இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்கும் அடுத்த படத்தில் 4 ஹீரோயின்கள்!

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான ஏஎல் விஜய் இயக்கி முடித்துள்ள 'தலைவி' திரைப்படம் விரைவில் வெளியாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

தமிழக முதல்வருக்கு தாழ்வான வேண்டுகோள் விடுத்த இயக்குனர் சேரன்!

சமீபத்தில் தமிழக முதல்வராக பதவி ஏற்ற முக ஸ்டாலின் அவர்களுக்கு இயக்குனர் சேரன் தாழ்வான வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார் 

நாகேஷுடன் நடித்த காட்சி: மலரும் நினைவுகளை பகிர்ந்த ஏ.ஆர்.முருகதாஸ் 

பிரபல இயக்குனர் ஏஆர் முருகதாஸ் அவர்கள் தான் இயக்கும் திரைப்படங்களில் ஒரு சில காட்சிகளில் தோன்றுவார் என்பது அனைவரும் அறிந்ததே. குறிப்பாக அவர் இயக்கிய 'ஏழாம் அறிவு' 'துப்பாக்கி' 'கத்தி'

தமிழகத்தில் ஊரடங்கை மேலும் ஒரு வாரத்திற்கு நீட்டிக்க மருத்துவக்குழு பரிந்துரை!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு வரும் ஜுன் 7 ஆம் தேதியோடு முடிவடையும் நிலையில் மேலும் ஒரு வாரத்திற்கு ஊரடங்கை நீடிக்கலாம் என மருத்துவ வல்லுநர் குழு பரிந்துரை செய்து இருப்பதாகத் தகவல் கூறப்படுகிறது.

இலவச உணவை அடுத்து 'குக் வித் கோமாளி' தர்ஷாவின் அடுத்த சமூக சேவை!

விஜய் டிவியில் ஒளிபரப்பான 'குக் வித் கோமாளி சீசன் 2 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட 'குக்'கள் மற்றும் கோமாளிகள் வேற லெவலில் பிரபலம் அடைந்தார்கள் என்பது தெரிந்தது.