தமிழ் ஹீரோயினுக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு கொரோனா: திருமணம் தள்ளிவைப்பு!

  • IndiaGlitz, [Friday,May 28 2021]

தமிழ் திரைப்பட ஹீரோயின் ஒருவருக்கு நிச்சயிக்கப்பட்ட மாப்பிள்ளைக்கு கொரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளதை அடுத்து அவர்களுடைய திருமணம் ஒத்தி வைக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன

விக்ராந்த் நடித்த ’நெஞ்சில் துணிவிருந்தால்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை மெஹ்ரீன் பிர்சாதா. அதன் பிறகு விஜய் தேவர்கொண்டாவின் ‘நோட்டா’, தனுஷின் ’பட்டாஸ்’ உள்பட ஒரு சில திரைப்படங்களில் நடித்தார். இந்த நிலையில் மெஹ்ரீன் பிர்சாதாவுக்கும், அரியானா மாநில முன்னாள் முதல்வர் பஜன்லாலின் பேரன் பவ்யா பிஷ்னோய் என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரமாண்டமாக திருமண நிச்சயதார்த்தம் நடந்ததை எடுத்து விரைவில் இவர்களுடைய திருமணம் நடக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.



இந்த நிலையில் நிச்சயதார்த்தம் முடிந்த ஒரு சில நாட்களில் மெஹ்ரீன் பிர்சாதாவுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. தற்போது அவர் குணமாகி உள்ளதை அடுத்து அவருடைய வருங்கால கணவருக்கும் அவருடைய குடும்பத்தாருக்கும் கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல் வெளிவந்துள்ளது. இந்த நிலையில் மெஹ்ரீன் பிர்சாதாவின் திருமணம் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனையடுத்து மெஹ்ரீன் பிர்சாதாவுக்கு அவருடைய ரசிகர்கள் ஆறுதல் வார்த்தைகள் கூறி வருகின்றனர்.