close
Choose your channels

லிங்குசாமியின் 'தி வாரியர்' வெற்றி பெற பிரபல தமிழ் நடிகர் வாழ்த்து!

Thursday, July 14, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாக்கிய ’தி வாரியர்’ என்ற திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

முதல் முறையாக நேரடி தமிழ் படத்தில் ராம் பொத்தினேனி நடித்துள்ளார் என்பதும் முதல் முறையாக ஒரு நேரடி தெலுங்கு திரைப்படத்தை லிங்குசாமி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு அருமையான கமர்சியல் படம் என்று படம் பார்த்த பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் டீசர் டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான கார்த்தி, லிங்குசாமி உள்பட’தி வாரியர்’ படக்குழுவினர்களுக்கு, படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘தி வாரியர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆவதற்கு எனது வாழ்த்துக்கள். லிங்குசாமி மற்றும் அவரது முழு அணியின் கடுமையான உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ராம் பொத்தினேனி, உங்கள் திறமை மற்றும் மற்றும் நீங்கள் திரையில் கொண்டு வரும் எனர்ஜிக்காக ரசிகர்கள் உங்களை கண்டிப்பாக நேசிப்பார்கள்.

கீர்த்தி செட்டி, நீங்கள் ஏற்கனவே இங்கே பிரபலம் ஆகி விட்டீர்கள், உங்களை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். என்று தெரிவித்துள்ளார். கார்த்தியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment