லிங்குசாமியின் 'தி வாரியர்' வெற்றி பெற பிரபல தமிழ் நடிகர் வாழ்த்து!

பிரபல இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் ராம் பொத்தினேனி, கீர்த்தி ஷெட்டி நடிப்பில் உருவாக்கிய ’தி வாரியர்’ என்ற திரைப்படம் நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

முதல் முறையாக நேரடி தமிழ் படத்தில் ராம் பொத்தினேனி நடித்துள்ளார் என்பதும் முதல் முறையாக ஒரு நேரடி தெலுங்கு திரைப்படத்தை லிங்குசாமி இயக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த படம் ஒரு அருமையான கமர்சியல் படம் என்று படம் பார்த்த பிரபலங்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர் என்பதும் இந்த படத்தின் டீசர் டிரைலர் படத்தின் எதிர்பார்ப்பை மிகப்பெரிய அளவில் உயர்த்தி உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தமிழ் திரையுலகின் பிரபல நடிகர்களில் ஒருவரான கார்த்தி, லிங்குசாமி உள்பட’தி வாரியர்’ படக்குழுவினர்களுக்கு, படம் வெற்றியடைய வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘தி வாரியர்’ திரைப்படம் உலகம் முழுவதும் மிகப்பெரிய அளவில் ரிலீஸ் ஆவதற்கு எனது வாழ்த்துக்கள். லிங்குசாமி மற்றும் அவரது முழு அணியின் கடுமையான உழைப்புக்கு நிச்சயம் வெற்றி கிடைக்கும். ராம் பொத்தினேனி, உங்கள் திறமை மற்றும் மற்றும் நீங்கள் திரையில் கொண்டு வரும் எனர்ஜிக்காக ரசிகர்கள் உங்களை கண்டிப்பாக நேசிப்பார்கள்.

கீர்த்தி செட்டி, நீங்கள் ஏற்கனவே இங்கே பிரபலம் ஆகி விட்டீர்கள், உங்களை நாங்கள் அன்புடன் வரவேற்கிறோம். என்று தெரிவித்துள்ளார். கார்த்தியின் இந்த பதிவு தற்போது வைரலாகி வருகிறது.

More News

'லவ் யூ', ரியல் ஹீரோவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்த வரலட்சுமி: வீடியோ வைரல்

தமிழ் திரையுலகின் பிரபல நடிகைகளில் ஒருவரான வரலட்சுமி 'லவ் யூ' என்று கூறி தனது ரியல் ஹீரோவுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்து வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது. 

கணவர் இல்லாத முதல் திருமண நாள்: மீனாவின் உருக்கமான பதிவு

நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் கடந்த ஜூன் மாதம் 25 ஆம் தேதி காலமான நிலையில் நேற்று மீனா தனது திருமண நாள் குறித்து உருக்கமாக செய்த பதிவு இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

'தி வாரியர்' உண்மைக்கதையா? இயக்குனர் லிங்குசாமி தகவல்!

லிங்குசாமி இயக்கத்தில் பிரபல தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகியுள்ள 'தி வாரியர்' என்ற திரைப்படம் நாளை தமிழ் தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளில் வெளியாக உள்ளது.

'சுத்தி கோமாளிகளை வச்சுகிட்டா முட்டாள் கூட அறிவாளி மாதிரி தான் தெரிவான்”: 'குலுகுலு' டிரைலர்

சந்தானம் நடித்த 'குலுகுலு' திரைப்படம் வரும் 29ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது என்பதும் இந்த படத்தை உதயநிதி ஸ்டாலினின் ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் தமிழகத்தில் ரிலீஸ் செய்ய உள்ளது

விடுமுறை நாளில் ரிலீஸாகும் மிஷ்கினின் 'பிசாசு 2': தேதி அறிவிப்பு!

பிரபல இயக்குனர் மிஸ்கின் இயக்கத்தில் உருவாகியுள்ள 'பிசாசு 2' திரைப்படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளதை அடுத்து சினிமா ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.