close
Choose your channels

தவெக நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் திரைப்பட ஹீரோ.. விஜய் கட்சியில் இணைகிறாரா?

Sunday, July 7, 2024 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் சென்னையில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் நிகழ்ச்சியில் தமிழ் திரைப்பட ஹீரோ கலந்து கொண்டதை அடுத்து அவர் விஜய் கட்சியில் இணைகிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தளபதி விஜய், தமிழக வெற்றி கழகம் என்ற அரசியல் கட்சியை தொடங்கினார் என்பதும் இந்த கட்சி வரும் 2026 ஆம் ஆண்டு நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் என்று அறிவித்திருந்தார் என்பது தெரிந்தது.

இந்த நிலையில் விஜய்யின் தமிழக வெற்றி கழகம் கட்சியில் இதுவரை எந்த சினிமா பிரபலமும் இணைந்ததாக தகவல் வெளிவராத நிலையில் சமீபத்தில் சென்னையில் நடந்த தமிழக வெற்றி கழகத்தின் நிகழ்ச்சி ஒன்றில் தமிழ் திரைப்பட ஹீரோ விமல் கலந்து கொண்டார்.

இதனை அடுத்து அவர் செய்தியாளர்களிடம் பேசிய போது ’எனது தம்பிகளுக்காக இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாகவும், என்னை அன்பாக அழைத்ததால் கலந்து கொண்டதாகவும் தெரிவித்தார்.

மேலும் தளபதி விஜய்யின் ’கில்லி’ திரைப்படத்தில் தான் நான் அறிமுகமானேன், அவருடன் 80 நாட்கள் பணிபுரியும் வாய்ப்பு எனக்கு கிடைத்தது, அந்த பாசத்திற்காகவும் விஜய் ரசிகர்களான எனது தம்பிகளின் அழைப்பின் பேரிலும் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டேன், மற்றபடி கட்சியில் இணைவது குறித்த எந்த யோசனையும் இப்போது எனக்கு இல்லை’ என்று தெரிவித்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment