கார் விபத்தில் தமிழ்ப்பட ஹீரோ பரிதாப பலி

  • IndiaGlitz, [Tuesday,October 29 2019]

கடந்த 2010ஆம் ஆண்டு வெளிவந்த புழல்’ என்ற திரைப்படத்தில் மூன்று கதாநாயகர்களில் ஒருவராக நடித்த மனோ என்ற நடிகர் கார் விபத்தில் பரிதாபமாக பலியானார். அவருக்கு வயது 37.

புழல் உள்பட ஒருசில திரைப்படங்களிலும் தனியார் தொலைக்காட்சியில் ‘மானாட மயிலாட’ என்ற நிகழ்ச்சியில் நடனமாடி பிரபலமானவருமான சென்னை கொரட்டூரை சேர்ந்த மனோவும், அவரது மனைவி லிவியாவும் தீபாவளி தினத்தில் அதாவது அக்டோபர் 27-ந்தேதி இரவு காரில் கூடுவாஞ்சேரியில் உள்ள நண்பர் வீட்டுக்கு சென்றனர். அதன்பின்னர் அவர்கள் திரும்பி சென்னைக்கு வந்து கொண்டு இருந்தபோது அவர்கள் வந்த கார் வண்டலூர்-மீஞ்சூர் சாலை அருகே திடீரென கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது.

இதனையடுத்து சாலை நடுவில் உள்ள தடுப்பு சுவரில் பயங்கரமாக மோதி விபத்துக்குள்ளானதில் பலத்த காயம் அடைந்த நடிகர் மனோ சம்பவ இடத்திலேயே பலியானார். அவரது மனைவி லிவியா பலத்த காயத்துடன் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த விபத்து குறித்து போக்குவரத்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

More News

32 ஆண்டுகளாக ஒரு ஆழ்துளை கிணறு மரணம் இல்லை: அமெரிக்காவில் இருந்து பாடம் கற்குமா இந்தியா?

ஆழ்குழாய் கிணற்றில் தவறி விழுந்து சுஜித் என்ற 2 வயது சிறுவன் மரணம் என்பது தமிழகத்திலும், இந்தியாவிலும் முதல் மரணமல்ல. இதற்கு முன்னர் பல குழந்தைகள்

நிவாரண உதவியாக ரூ.1 கோடி உதவித்தொகை கொடுத்த '2.0' பட நடிகர்

பீகார் மாநிலத்தில் அக்டோபர் முதல் வாரம் கனமழை கொட்டித் தீர்த்தது. குறிப்பாக தலைநகர் பாட்னாவில் ஒரு வாரம் விடாமல் மழை பெய்ததால் தாழ்வான பகுதிகள் தண்ணீர் சூழ்ந்து வெள்ளக்காடாக காட்சியளித்தது.

சுஜித் மரணம் குறித்து ரஜினிகாந்த் டுவீட்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகேயுள்ள நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த 2 வயது சுஜித்தின் இழப்பை இன்னும் தமிழக மக்களால் ஜீரணித்து கொள்ள முடியவில்லை.

இது ஒரு தேவை இல்லாத உயிரிழப்பு: லதா ரஜினிகாந்த்

இரண்டு வயது சுஜித் ஆழ்துளையில் உயிரை விட்ட துயரமான சம்பவம் தமிழகத்தை மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே உலுக்கிவிட்டது. இந்த ஒரு உயிரிழப்பிற்கு

சுஜித் செய்தியை பார்த்து கொண்டிருந்த தம்பதியின் 2 வயது மகள் மரணம்!

திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டி என்ற பகுதியில் இரண்டு வயது சுஜித் என்ற சிறுவன் மூடப்படாத ஆழ்துளை கிணற்றில் விழுந்து பலியான சோகம் தமிழகத்தையே கண்ணீர் கடலில் ஆழ்த்தியுள்ளது