பிக்பாஸ் தெலுங்கு போட்டியாளராகும் தமிழ் ஹீரோ.. டிஆர்பி எகிறுமா?
- IndiaGlitz, [Friday,July 26 2024]
பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சி விரைவில் தொடங்க இருக்கும் நிலையில் இந்த நிகழ்ச்சியில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் போட்டியாளராக களம் இறக்கப்பட இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.
பிக் பாஸ் தமிழ் 7 சீசன் முடிவடைந்து 8வது சீசன் விரைவில் தொடங்க வாய்ப்பு இருப்பதாகவும், குக் வித் கோமாளி நிகழ்ச்சி முடிந்ததும் பிக் பாஸ் 8 தொடங்க திட்டமிடப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் தமிழ் போலவே தெலுங்கு நிகழ்ச்சியும் இதுவரை 7 சீசன்கள் முடிவடைந்த நிலையில் 8வது சீசனுக்கு போட்டியாளர்கள் தேர்வு நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.
பிக் பாஸ் தமிழ் அனைத்து சீசனையும் கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய நிலையில், பிக் பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை ஜூனியர் என்டிஆர், நானி, ஆகியோர் தொகுத்து வழங்கிய நிலையில் தற்போது நாகார்ஜுனா தொகுத்து வழங்கி வருகிறார். 8வது சீசனையும் அவர்தான் தொகுத்து வழங்க இருப்பதாகவும் கடந்த சீசனை விட இந்த சீசனில் அவருக்கு மிகப்பெரிய சம்பளம் கொடுக்கப்பட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் பிக் பாஸ் தெலுங்கு 8வது சீசனில் 90களில் தமிழில் பிரபல ஹீரோவாக இருந்த நடிகர் அப்பாஸ் ஒரு போட்டியாளராக களமிறங்க இருப்பதாகவும் அவருக்கு ஒரு மிகப்பெரிய சம்பளம் வழங்க இருப்பதாக கூறப்படுகிறது. இந்த தகவல் உறுதி செய்யப்பட்டால் டிஆர்பி எகிறும் என எதிர்பார்க்கப்படுகிறது.