'காந்தாரா' ரிஷப் ஷெட்டியை கட்டிப்பிடித்து பாராட்டிய தமிழ் ஹீரோ: வைரல் வீடியோ!
Send us your feedback to audioarticles@vaarta.com
கன்னட திரையுலகில் சூப்பர் ஹிட்டான ’காந்தாரா’ என்ற திரைப்படம் இன்று தமிழில் ரிலீஸ் ஆகியிருக்கும் நிலையில் இந்த படத்திற்கு மிகப் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
ஏற்கனவே இந்த படத்தை பார்த்து நடிகர் தனுஷ் தனது டுவிட்டரில் பாராட்டிய நிலையில் தற்போது மற்றொரு தமிழ் ஹீரோ ’காந்தாரா’ படக்குழுவினர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.
’காந்தாரா’ படத்தின் கதை என்பது பழங்காலத்தில் நிம்மதி இல்லாமல் இருந்த அரசன் ஒருவன் பழங்குடியினர் வழிபடும் தெய்வத்தின் சிலையை வணங்கிய உடன் நிம்மதி அடைகிறார். அதற்காக அவர் தனது நிலத்தின் பெரும் பகுதியை பழங்குடியினருக்கு எழுதிக் கொடுக்கிறார். ஆனால் சில ஆண்டுகள் கழித்து மன்னரின் வம்சாவளியை சேர்ந்த ஒருவர் அந்த நிலத்தை பிடுங்க நினைக்கும்போது அந்த தெய்வத்தின் சக்தியால் ரத்தம் கக்கி இறக்கிறார்.
இந்த நிலையில் சில ஆண்டுகள் கழித்து அரசு அதே பழங்குடியினரின் நிலத்தை பிடுங்க நினைக்கும் போது அந்த பழங்குடியினத்தைச் சேர்ந்த ரிஷப் ஷெட்டி எப்படி போராடி அரசின் முயற்சியை தடுக்கின்றார் என்பதுதான் இந்த படத்தின் கதை.
ரூ.10 கோடி பட்ஜெட்டில் உருவான இந்த படம் கர்நாடகத்தில் மட்டும் ரூபாய் 50 கோடி வசூல் செய்ததாக கூறப்படும் நிலையில் தற்போது தமிழிலும் இந்தப்படம் மிகப்பெரிய வசூலை செய்யும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த படத்தை இன்று பார்த்த பிரபல நடிகர் கார்த்தி படம் பார்த்து முடித்ததும் ரிஷப் ஷெட்டியை கட்டியணைத்து தனது பாராட்டுக்களை தெரிவித்துள்ளார். இதுகுறித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Actor @Karthi_Offl expresses his love towards @shetty_rishab for #Kantara #காந்தாரா #KantaraFromToday @VKiragandur @hombalefilms @DreamWarriorpic @prabhu_sr @gowda_sapthami @AJANEESHB #ArvindKashyap @actorkishore #KantaraTamil @proyuvraaj pic.twitter.com/icIayKLzRg
— Ramesh Bala (@rameshlaus) October 15, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com