ஜூனியர் என்.டி.ஆர் அடுத்த படத்தில் வில்லன் பிரபல தமிழ் ஹீரோவா?

  • IndiaGlitz, [Wednesday,February 08 2023]

விஜய் சேதுபதி உள்பட பிரபல நடிகர்கள் ஹீரோக்களாக மட்டுமின்றி வில்லன்களாகவும் நடித்து வருகிறார்கள் என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் பிரபல தெலுங்கு நடிகர் ஜூனியர் என்டிஆர் நடிக்க இருக்கும் அடுத்த திரைப்படத்தில் பிரபல தமிழ் ஹீரோ ஒருவர் வில்லனாக நடிக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

பிரமாண்ட இயக்குனர் எஸ்எஸ் ராஜமெளலி இயக்கத்தில் உருவான ’ஆர்ஆர்ஆர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த ஜூனியர் என்டிஆர் தற்போது கொரட்டாலா சிவா இயக்கத்தில் உருவாக இருக்கும் படத்தை இயக்க உள்ளார் என்பதும் இந்த படம் ஜூனியர் என்.டி.ஆரின் 30வது படம் என்பதும் குறிப்பிடத்தக்கது.

சிரஞ்சீவி, ராம்சரண் தேஜா நடித்த ’ஆச்சார்யா’ படத்தை அடுத்து கொரட்டாலா சிவா இந்த படத்தை அதிரடி ஆக்சன் படமாக உருவாக்க உள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி என பான் இந்திய திரைப்படமாக உருவாக இருக்கும் இந்த படத்தில் வில்லனாக நடிக்க பிரபல தமிழ் ஹீரோ சியான் விக்ரம் உடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

அதேபோல் பாலிவுட்டிலும் ஒரு பிரபல நடிகர் இந்த படத்தின் முக்கிய கேரக்டரில் நடிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அனிருத் இசை அமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கும் என்று கூறப்படுகிறது.
 

More News

'ஏகே 62' பட இசையமைப்பாளர் இவரா? மகிழ்திருமேனியின் வேற லெவல் பிளான்..!

அஜித் நடிக்க இருக்கும் 62வது திரைப்படத்தை மகிழ்திருமேனி இயக்க இருக்கிறார் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும்

திருமண வீடியோவில் ஹன்சிகாவின் அழுகைக்கு காரணம் யார்? முன்னாள் காதலரா? 

நடிகை ஹன்சிகாவின் திருமணம் கடந்த டிசம்பர் 4 ஆம் தேதி ராஜஸ்தானில் உள்ள ஜெய்ப்பூர் அரண்மனையில் பிரம்மாண்டமாக நடந்தது. இந்நிலையில் ஹன்சிகாவின் திருமண வீடியோ 'லவ் ஷாதி டிராமா'

பிராமணரை குற்றம் சொல்ல உங்களுக்கு என்ன தகுதி இருக்கு? ஜேம்ஸ் வசந்தனின் காரசார பதிவு..!

 நடிகர் போஸ்கி சமீபத்தில் பிராமணர் சமூகம் குறித்து உயர்வாக பேசிய வீடியோ இணையதளங்களில் வைரலான. இந்த வீடியோவுக்கு பலர் கடும் விமர்சனம் செய்தனர். சிலர் கேலியும் கிண்டலும் செய்தனர்.

'பீப் சவுண்ட்' இல்லாத 'துணிவு'; அஜித் ரசிகர்கள் குஷி..!

அஜித் நடித்த 'துணிவு' திரைப்படம் கடந்த பொங்கல் விருந்தாக வெளியான நிலையில் இந்த படம் உலகம் முழுவதும் 200 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்ததாக கூறப்படுகிறது. 

ஆரம்பமாகிறது 'பொன்னியின் செல்வன் 2' புரமோஷன்.. முதல் அப்டேட் இதுதான்..!

லைகா நிறுவனத்தின் சுபாஷ்கரன் அவர்களின் பிரமாண்டமான தயாரிப்பில் மணிரத்னம் இயக்கத்தில் உருவான திரைப்படம் 'பொன்னியின் செல்வன்'. இந்த படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு