CSK விற்கு எதிராக சோஷியல் மீடியாவில் டிரெண்டாகும் ஹேஷ்டேக்… காரணம் இதுதான்…
Send us your feedback to audioarticles@vaarta.com
ஐபிஎல் அணிகளில் முக்கியமான அணியாகக் கருதப்படும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி நடந்துமுடிந்த ஐபிஎல் ஏலம் மூலமாக இளம் மற்றும் அனுபவம் வாய்ந்த ஒரு பெரிய கூட்டணியை உருவாக்கியுள்ளது. 87.5 கோடிக்கு 25 வீரர்களைத் தேர்வு செய்துள்ள இந்த அணிக்கு எதிராக ஹேஷ்டேக்குகள் தற்போது சோஷியல் மீடியாவில் டிரெண்டாகி வருகின்றன.
சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சின்னதல சுரேஷ் ரெய்னாவையும் நீண்டகாலமாக அணியில் விளையாடிவரும் டுபிளஸிஸைம் ஏலத்தில் எடுக்கவில்லை. அவர்களுடைய ரசிகர்கள்தான் சிஎஸ்கே அணிக்கு எதிராக ஹேஷ்டேக்கை வெளியிட்டு வருகின்றனர் என முதலில் கூறப்பட்டது. ஆனால் தற்போது இலங்கை வீரர் ஒருவரை ஏலத்தில் எடுத்ததால் தமிழ் அமைப்புகளை அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும். இல்லாவிட்டால் போட்டிகளை நடத்தவிட மாட்டோம் என்று போராட்டங்களை துவங்கியிருப்பது பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.
சிஎஸ்கே இலங்கையைச் சேர்ந்த இளம் சுழற்பந்துவீச்சாளர் மகதிஷ் தீக்ஷனாவை ரூ.70 லட்சத்திற்கு ஏலம் எடுத்துள்ளது. இதையடுத்து தமிழர்களுக்கு எதிராக செயல்படும் இலங்கையைச் சேர்ந்த ஒரு வீரரை சிஎஸ்கே ஏலத்தில் எடுத்திருக்கக்கூடாது எனவும் உடனே அவரை அணியில் இருந்து நீக்க வேண்டும் என்றும் சில இடங்களில் பதாகை ஏந்தி போராட்டங்களை நடத்தியுள்ளனர்.
மேலும் மகதிஷ் தீக்ஷனாவை அணியில் இருந்து நீக்குமாறு சோஷியல் மீடியாவில் ஹேஷ்டேக் வெளியிட்டு வருவதும் குறிப்பிடத்தக்கது. இதற்கு முன்பு இலங்கையை சேர்ந்த ஒருசில வீரர்கள் மட்டுமே ஐபிஎல் போட்டிகளில் விளையாடிவந்தனர். மேலும் இலங்கை வீரர்களுக்குப் பாதுகாப்பு கொடுக்க முடியாது. அதனால் அணியில் எடுக்க வேண்டாம் என்றுகூட கடந்த சில வருடங்களில் ஐபிஎல் அணிகளுக்கு அழுத்தங்கள் இருந்துவந்தன. இந்நிலையில் மகதிஷ் தீக்ஷனா விவகாரம் தற்போது இணையத்தில் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது.
Thu, you should be ashamed to allow #GenocideSrilanka representing player inside TN , country which massacred tens&thousands of our Tamils, with still no justice !
— فيجاي ??سهانا (@sahana_xo) February 13, 2022
CSK lost my respect ?? #Boycott_ChennaiSuperKings https://t.co/EbgF11q6OM
Maheesh Theekshana should be boycotted as the genocidal Sri Lankan government uses its sports players & artists to revamp their war criminal image.
— கண்ணம்மா (@iThamizhi) February 14, 2022
No 1 who represents a genocidal army shld rep. a sports team, that too in a Tamil land.#Boycott_ChennaiSuperKings @ChennaiIPL pic.twitter.com/RjXpYhgM4e
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments