தயாரிப்பாளர் சங்கத்தின் பாதுகாப்பு அணியில் யார் யார்? பரபரப்பு தகவல்
- IndiaGlitz, [Wednesday,March 18 2020]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தலில் விஷால் அணியும் பாரதிராஜா அணியும் மோதும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் விஷால் அணியை போட்டியிட விடாமல் செய்ய வேண்டும் என்ற தீவிரத்தில் பல தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து செயல்பட்டு வருவதாகவும் கோலிவுட்டில் கூறப்படுகிறது.
இந்த நிலையில் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் பாதுகாப்பு அணி என்ற ஒரு அணியை தயாரிப்பாளர் டி சிவா அவர்கள் சற்று முன் வெளியிட்டுள்ளார். இதுகுறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூறியிருப்பதாவது:
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்களின் நலன், வளர்ச்சி, பாதுகாப்பு கருதி, தமிழ் சினிமாவில் அனுபவம் வாய்ந்த தயாரிப்பாளர்கள் ஒருங்கிணைந்து ஒரு சிறந்த அணியை கருவாக்கி, வருகின்ற தயாரிப்பாளர்கள் சங்க தேர்தலில் போட்டியிடுகிறது. அணியின் அங்கத்தினர்களின் விபரங்கள் கீழே கொடுக்கப் பட்டுள்ளது.
திரு டி. சிவா, தலைவர்
திரு கே.முரளிதரன்
திரு பி.எல் தேனப்பன், செயலாளர்
திரு ஜேஎஸ்கேசதிஷ் குமார, செயலாளர்
திரு ஆர்கே. சுரேஷ், துணை தலைவர்
திரு ஜி. தனஞ்செயன், துணை தலைவர்
திரு. ராஜன்
தரு. ராதாரவி
திரு. கே.எஸ்.ஸ்ரீனிவாசன்
திரு. சித்ரா லக்ஷ்மணன்
திரு. ஹெச்.முரளி
திரு. எஸ்.எஸ்.துரைராஜ்
திரு. விஜயகுமார்
திரு. கே.உதயகுமார்
திரு. மனோஜ் குமார்
திரு. . நந்தகோபால்
திரு. மனோபாலா
திரு. பாபு கணேஷ்
திரு. பஞ்சு சுப்பு
தரு. எம்.எஸ்.முருகராஜ்
திரு. வினோத் குமார்
திரு. ரங்கநாதன்
திரு. பஞ்ச் பரத்
திரு. மதுரை செல்வம் மற்றும் மூன்று தயாரிப்பாளர்கள்
திரைப்படம் எடுக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக திரைப்படங்கள் எடுக்கவும், திரைப்படம் எடுக்காமல் இருக்கும் தயாரிப்பாளர்கள் பாதுகாப்பாக வாழவும் உழைப்பதே எங்கள் அணியின் நோக்கம்...
உங்கள் நல்லாதரவையும், வாழ்த்துகளையும் எதிர்பார்க்கிறோம்.
இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர்களின் பாதுகாப்பு அணி. Yes, "Producer's Protection Team".
— T Siva AmmaCreations (@TSivaAmma) March 18, 2020
First Step Forward: Existing Producer Council insurance expired today but 5 lakhs worth insurance for the Producers will be organised by our Protection Team immediately. pic.twitter.com/xrJxp7tutE