திரைப்பட தயாரிப்பாளர் சங்க தேர்தலில் திடீர் மாற்றம்
- IndiaGlitz, [Wednesday,January 25 2017]
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத் தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 5ஆம் தேதி நடைபெறும் என்றும் இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு குஷ்பு உள்பட நான்கு பேர் போட்டியிட உள்ளதாகவும் வெளிவந்த செய்தியினை ஏற்கனவே பார்த்தோம். இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்க தேர்தல் திடீரென ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.
திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்க தேர்தல் பிப்ரவரி 5ஆம் தேதிக்கு பதிலாக வருகிற மார்ச் 5ஆம் தேதியன்று நடைபெறும் என்று தேர்தல் அதிகாரியான ஓய்வுபெற்ற நீதிபதி எஸ்.ராஜேஷ்வரன் அறிவித்துள்ளார். இந்த ஒத்திவைப்புக்கான காரணம் எதையும் அவர் அறிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் தற்போது தயாரிப்பாளர் சங்கத்தில் நிர்வாகிகளாக இருப்பவ்ர்களின் பதவிக்காலம் இன்றுடன் முடிவடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது.