பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம்: தயாரிப்பாளர் சங்கம் அதிரடி அறிவிப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் மற்றும் பெப்சி ஒப்பந்தம் இடையே செய்யப்பட்ட இருந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்படுவதாகவும் இனி பெப்சி தொழிலாளர்கள் இல்லாமலும் படப்பிடிப்பு நடத்துவோம் என தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளதால் தமிழ் சினிமாவில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
தமிழ்த் திரையுலகம் சமூகமாகவும், பொருளாதார இழப்பை தவிர்க்கும் வகையில் இயங்குவதற்காக தயாரிப்பாளர்கள், மற்றும் தொழிலாளர் சம்மேளனத் தலைவா் மற்றும் நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அதற்கு முழு ஒத்துழைப்பு தருவதாக திரு.ஆர்.கே.செல்வமணி அவாகளின் தலைமையிலான நிர்வாகிகள் ஒப்புக்கொண்டார்கள்.
ஆனால், அடுத்த நாளே தயாரிப்பாளர்கள் அனைவருக்கும் அதிர்ச்சி அளிக்கும் வகையில் சம்மேளனத் தலைவர் திரு.ஆர்.கே.செல்வமணி அவர்கள் தயாரிப்பாளர்களின் நலன்களை சீர்குலைக்கும் வகையில் தன்னிச்சையாக செயல்படுவது கண்டனத்திற்கு உரியது.
ஆகவே, தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளாகள் நலன் கருதியும், தமிழ்த் திரையுலகத்தை காப்பாற்றும் வகையிலும். தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தில் அவசர செயற்குழு கூட்டம் 06.08.2021-அன்று நடைபெற்று கீழ்கண்ட தீர்மானங்கள் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
தீர்மானங்கள்
1. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தம் 06.08.2021 முதல், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்க உறுப்பினர்களை எந்த வகையிலும் கட்டுபடுத்தாது என்று தீரமானம் நிறைவேற்றப்பட்டது.
2. உச்ச நீதிமன்ற ஆணைப்படி தயாரிப்பாளர்கள் தங்களுக்கு விருப்பமானவர்களை பணியமர்த்திக்கொண்டு, திரைப்படத்திற்குண்டான படப்பிடிப்பு உட்பட அனைத்து பணிகளையும் மேற்கொள்ளலாம் என்று ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
3. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கும், தென்னிந்தியத் திரைப்படத் தொழிலாளர்கள் சம்மேளனத்திற்கும் இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மீறி, தொடர்ந்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளாகள் சங்கத்தினை அலட்சியப்படுத்தி வரும் தொழிலாளர்கள் சம்மேளனத்துடன் எந்த ஒரு பேச்சுவார்த்தையும் கிடையாது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
4. மேற்கண்ட தீர்மானங்களை மீறி படப்பிடிப்பு நடத்துவதற்கோ மற்றும் திரைப்பட தயாரிப்பு பணிகளை செய்வதற்கோ எந்த அமைப்பாவது இடையூறு ஏற்படுத்தினாலோ பணிசெய்பவர்களை தடுத்தாலோ, அவர்கள் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments