திருமணத்திற்கு முன்பே 34 வயது பெண்ணுடன் கள்ளக்காதல்: 24 வயது பாடகரின் மகன் கைது
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகில் கானா பாடல்கள் மூலம் பிரபலமானவர் பழனி. இவருடைய 24 வயது மகன் தரணி என்பவருக்கு சமீபத்தில் விஜயபானு என்ற பெண்ணுடன் திருமணம் நடைபெற்றது. காதல் திருமணம் ஆன இந்த திருமணம் இரு வீட்டார் சம்மதத்துடன் நடைபெற்ற நிலையில் சில ஆண்டுகள் மட்டுமே சந்தோசமாக இந்த தம்பதிகள் வாழ்ந்தனர். அதன்பின் அதிகமான வரதட்சணை, நகைகள் கேட்டு மனைவி விஜயபானுவை, தரணி கொடுமைப்படுத்தி உள்ளதாக தெரிகிறது
இந்த நிலையில் தனது கணவருக்கும் இன்னொரு பெண்ணுக்கும் நெருக்கமான உறவு இருப்பதை விஜயபானு கண்டுபிடித்தார். இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் தான் முற்றிலும் ஏமாற்றப்பட்டோம் என்பதை அறிந்து தனது பெற்றோரின் துணையுடன் போலீசில் இதுகுறித்து புகார் செய்தார்
போலீசார் தரணியை அழைத்து விசாரணை செய்தபோதுதான் 24 வயது தரணிக்கு ஏற்கனவே 34 வயதான ஒரு பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்ததாகவும், அந்தப் பெண்ணுக்கு ஏற்கனவே திருமணமாகி இரண்டு குழந்தைகள் இருந்ததாகவும், இந்த கள்ளக்காதல் உறவிலும் ஒரு குழந்தை பிறந்து உள்ளதாகவும் தெரிகிறது
திருமணத்திற்கு முன்பே அந்த பெண்ணுடன் கள்ளக்காதல் இருந்தும் கள்ள காதலை மறைத்து விஜயா பானுவை காதலித்து திருமணம் செய்து கொண்டதாகவும் விசாரணையில் தெரியவந்தது
இதனை அடுத்து வரதட்சனை கொடுமை செய்ததாக தரணி மீது வழக்கு பதிவு செய்த போலீசார், விஜயபானுவை கொடுமைப்படுத்தியதாக அவரது உறவினர்களையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்
மூத்த பெண்ணுடன் கள்ளக்காதல், காதல் மனைவியிடம் வரதட்சணை கொடுமை செய்த தரணி தற்போது சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments