பணமோசடி வழக்கு: தமிழ் திரைப்பட இயக்குனர் கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
பணமோசடி வழக்கு ஒன்றில் தமிழ் திரைப்பட இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன் என்பவர் சென்னை போலீசார்களால் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 2015ஆம் ஆண்டு வெளிவந்த 'கமர்கட்டு' என்ற படத்தை இயக்கியவர் இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன். இவர் 'இதயம் திரையரங்கம்' என்ற திரைப்படத்தை தயாரித்து இயக்க சவுகார்பேட்டையை சேர்ந்த அசோக் என்ற பைனான்சியரிடம் ரூ.40 லட்சம் கடன் வாங்கினார். இவருடன் சேர்ந்து இந்த படத்தை விஜயபத்மா மற்றும் அவரது கணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர்களும் இணைந்து தயாரிக்க திட்டமிட்டிருந்தனர். விஜயபத்மா ஏற்கனவே நர்த்தகி என்ற படத்தை இயக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சொன்ன தேதியில் பணத்தை திருப்பித்தராமல் ராம்கி கிருஷ்ணனனும் விஜயபத்மா மற்றும் அவரது கணவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர்களும் இழுத்தடித்துள்ளனர். இதனையடுத்து ஃபைனான்சியர் அசோக் கொடுத்த புகாரின் பேரில் மூவரின் மீதும் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
இதனையடுத்து இயக்குனர் ராம்கி ராமகிருஷ்ணன் உள்பட மூவரும் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தீவிரமாக தேடி வந்த நிலையில் கடந்த 27-ந்தேதி மத்திய குற்றப்பிரிவு போலீசாரால் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டனர்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments