எதையும் செய்ய தயாராக இருக்கின்றேன்: கதறி அழும் தமிழ் குடும்ப வீடியோவை வெளியிட்ட ராகவா லாரன்ஸ்
- IndiaGlitz, [Friday,May 15 2020]
கொரோனா வைரஸ் காரணமாக நாடு முழுவதும் கடந்த இரண்டு மாதங்களாக ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதை அடுத்து வெளிமாநிலங்களுக்கு வேலை நிமித்தம் சென்ற லட்சக்கணக்கான குடும்பங்கள் தற்போது சொந்த மாநிலங்களுக்கு திரும்ப முடியாமலும் தாங்கள் இருக்கும் மாநிலத்தில் வாழ முடியாமலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். மேலும் வெளிமாநில தொழிலாளர்கள் லட்சக்கணக்கானோர் வேலை இன்றி வருமானமின்றி அடிப்படை தேவையும் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருப்பதால் ஏராளமானோர் நடந்தே தங்கள் சொந்த மாநிலத்தில் சென்று கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் குஜராத்திற்கு வேலை நிமித்தமாக சென்ற தமிழ் குடும்பம் ஒன்று, அம்மாநிலத்தில் கடந்த இரண்டு மாதங்களாக வேலை இன்றி வருமானம் இன்றி கஷ்டப்பட்டு கொண்டிருக்கும் வீடியோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரல் ஆகியுள்ளது. தாங்கள் இரண்டு மாதங்களாக சாப்பாட்டுக்கே கஷ்டப்பட்டுக் கொண்டிருப்பதாகவும், குழந்தைகளுக்கு பால் வாங்க கூட முடியவில்லை என்றும் வெளியே சென்றால் போலீஸ்காரர்கள் அடிக்கிறார்கள் என்றும் அதில் ஒருவர் கூறியுள்ளார்.
எனவே எங்களை எப்படியாவது தமிழகத்துக்கு கொண்டு செல்ல தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் இந்த உதவியை தயவுசெய்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் கதறி அழுதபடி அந்த வீடியோவில் கூறி உள்ளனர். இந்த வீடியோவை தனது சமூக வலைபக்கத்தில் பதிவு செய்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், தமிழக அரசுக்கு வேண்டுகோள் வைத்துள்ளார். தயவு செய்து இந்த குடும்பத்திற்கு உதவுங்கள் என்றும் தனது பக்கத்தில் இருந்து உங்களுக்கு ஏதேனும் உதவி தேவைப்பட்டால் அதை நான் செய்ய தயாராக இருக்கிறேன் என்றும் ராகவா லாரன்ஸ் தெரிவித்துள்ளார். இந்த குடும்பத்தில் குழந்தைகளுடன் சேர்த்து பத்து பேர்களுக்கும் மேல் உள்ளதால், தமிழக அரசு இந்த குடும்பத்தை தமிழகத்திற்கு அழைத்து வர விரைவில் நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
My humble Request to the government, please help them. if you need any help from my side I’m ready to do it. Service is god??
— Raghava Lawrence (@offl_Lawrence) May 15, 2020
Click the link ????https://t.co/NL8z0n76Ap