இந்து மதம் குறித்த சர்ச்சைக்குரிய கருத்து: தமிழ் திரைப்பட இயக்குனர் அதிரடி கைது!
Send us your feedback to audioarticles@vaarta.com
கந்த சஷ்டி கவசம் குறித்து சர்ச்சைக்குரிய வீடியோவை வெளியிட்ட கருப்பர் கூட்டம் குழுவினர் மீது காவல்துறை நடவடிக்கை எடுத்ததன் பரபரப்பே இன்னும் முடிவடையாத நிலையில் தற்போது இந்து மத கடவுள்கள் குறித்து அவதூறு கருத்துக்களை தெரிவித்ததாக தமிழ் திரைப்பட இயக்குனர் வேலுபிரபாகரன் கைது செய்யப்பட்டு உள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமீபத்தில் கந்தசஷ்டி கவசத்தை சர்ச்சைக்குரிய வகையில் விமர்சனம் செய்த கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலை சேர்ந்தவர்கள் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். மேலும் அவர்கள் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது என்பதும் கருப்பர் கூட்டம் யூடியூப் சேனலில் உள்ள அனைத்து வீடியோக்களும் நீக்கப்பட்டன என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ’கடவுள்’ உள்ளிட்ட ஒருசில திரைப்படங்களை இயக்கிய இயக்குனர் வேலுபிரபாகரன் சமீபத்தில் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டியளித்தபோது அவர் இந்து மத கடவுள்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து கூறியதாக தெரிகிறது.
இது குறித்து இந்து மக்கள் கட்சியின் தென்சென்னை மாவட்ட தலைவர் மகேஷ், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அந்த புகாரில் ‛யு-டியூப் சேனலில் ஒரு பேட்டியில் வேலு பிரபாகரன் இந்துக்கள் பற்றியும், இந்து மதம் பற்றியும் அவதூறாக பேசி வருகிறார். கருப்பர் கூட்டத்துக்கு ஆதரவாகவும் பேசி வருகிறார். அவர் மீது சட்டரீதியான நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்,' என்று அந்த புகார் மனுவில் தெரிவித்திருக்கிறார்.
இந்த புகார் மனுவின் அடிப்படையில் இயக்குனர் வேலுபிரபாகரன் சற்றுமுன் கைது செய்யப்பட்டுள்ளதாக செய்திகள் வெளி வந்துள்ளதுள்ளது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments