ஸ்பெயின் நாட்டு அரசுக்கு நன்றி தெரிவித்த தமிழ் திரைப்பட இயக்குனர்..! என்ன காரணம்?
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரைப்பட இயக்குனர் ஒருவர் ஸ்பெயின் நாட்டு அரசுக்கு தனது நன்றியை சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஸ்பெயின் நாட்டு அரசு மாதவிடாய் நாட்களில் பெண்களுக்கு ஊதியத்துடன் கூடிய விடுமுறை என அறிவித்தது. இது குறித்த மசோதா ஸ்பெயின் நாட்டின் நாடாளுமன்றத்திலும் ஒப்புதல் பெறப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
மாதவிடாய் விடுமுறை வழங்கும் முதல் ஐவேப்பிய நாடு என்ற பெருமையை ஸ்பெயின் நாடு பெற்றுள்ள நிலையில் இது குறித்து ’ஹரா’ படத்தின் இயக்குனர் விஜய்ஸ்ரீ தனது டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
உலகம் முழுவதும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கும் மையகருத்தை கொண்ட காட்சிகளை ‘ஹரா’ படத்தில் வைத்திருந்தோம், அதை செயல்படுத்திய ஸ்பெயின் நாட்டு அரசுக்கு நன்றி என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் தமிழகத்தில் உள்ள நியூஸ்7 தமிழ் தொலைக்காட்சி நிறுவனத்தில் பணிபுரியும் பெண்களுக்கும் மாதவிடாய் விடுமுறை வழங்கப்பட்டு வருகிறது என்பதை அடுத்து நியூஸ் 7 குழுவினருக்கும் இயக்குனர் விஜய்ஸ்ரீ நன்றியை தெரிவித்துள்ளார்.
ஏற்கனவே கேரளாவில் உள்ள பல்கலைக்கழகம் ஒன்றில் மாதவிடாய் நாட்களில் கல்லூரி மாணவிகளுக்கு விடுமுறை என அறிவிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
உலகம் முழுவதும் பெண்களுக்கு மாதவிடாய் விடுமுறை அளிக்கும் மையக்கரு #ஹரா படத்தின்சில காட்சிகள் உருவாக்கினோம்.
— Vijay Sri G (@vijaysrig) February 20, 2023
அதை செயல்படுத்தும் @news7tamil மற்றும் #ஸ்பெயின் நாட்டுக்கு நன்றி.. ஹரா படக்குழவினரின் #மோகன் @khushsundar #ஹரா @onlynikil #2023@SonyMusicSouth pic.twitter.com/Y738ar54wG
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout