முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பிரபல தமிழ் இயக்குனரின் மகன்: குவியும் பாராட்டுக்கள்

  • IndiaGlitz, [Sunday,June 26 2022]

தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரின் மகன் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான நிலையில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று சேலம் மற்றும் நெல்லை அணிகளுக்கிடையிலான போட்டி நெல்லையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.

இந்த போட்டியில் நெல்லை அணிக்காக பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் மகன் ஆர்யன் யோஹான் அறிமுகமானார். இவர் நேற்று தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த போட்டியில் நெல்லை அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தளபதி விஜய் நடிக்கும் ’யோஹன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்குவதாக இருந்தது. இந்த படத்தின் டைட்டில் அவரது மகன் ஆர்யன் யோஹானை வைத்து தான் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
 

More News

'என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை': தன்னுடைய செய்திக்கு டுவிட் போட்ட ராஷ்மிகா!

ஊடகங்களில் வெளியான தன்னுடைய செய்தியை பார்த்து தனது டுவிட்டர் பக்கத்தில் 'இந்த செய்தியை பார்த்து என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை' என ராஷ்மிகா மந்தனா பதிவு செய்திருப்பது

தொழிலதிபர் ஆகிறார் விஜய்யின் 'வாரிசு' பட நடிகை!

தளபதி விஜய் நடிக்கும் 'வாரிசு' படத்தில் நாயகியாக நடிக்கும் ராஷ்மிகா மந்தனா தொழிலதிபராக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன 

அட்லி படத்திற்கு முன்பே ரிலீஸாகும் ஷாருக்கான் படம்: ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்

பிரபல இயக்குனர் அட்லி இயக்கத்தில் பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஷாருக்கான் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் 'ஜவான்'. இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்றது

செல்ல நாய்க்குட்டியுடன் விமான பயணம் செய்யும் பிரபல தமிழ் நடிகை: வைரல் வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் தனது செல்ல நாய் குட்டியுடன் விமான பயணம் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அவை

ஹனிமூனை முடித்துவிட்டு கிளம்புகிறார்களா விக்கி-நயன்: வைரல் புகைப்படங்கள்!

பிரபல இயக்குனர் விக்னேஷ் சிவன் கடந்த சில நாட்களுக்கு முன் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவை திருமணம் செய்து கொண்டார் என்பதும் திருமணத்துக்கு பின்னர் இந்த தம்பதிகள் தாய்லாந்து