முதல் பந்திலேயே விக்கெட் எடுத்த பிரபல தமிழ் இயக்குனரின் மகன்: குவியும் பாராட்டுக்கள்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குனரின் மகன் நேற்று நடைபெற்ற டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடரில் அறிமுகமான நிலையில் முதல் பந்திலேயே விக்கெட் எடுத்துள்ளார். இதனை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.
கடந்த சில நாட்களாக டிஎன்பிஎல் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே. இந்த நிலையில் நேற்று சேலம் மற்றும் நெல்லை அணிகளுக்கிடையிலான போட்டி நெல்லையில் உள்ள மைதானத்தில் நடைபெற்றது.
இந்த போட்டியில் நெல்லை அணிக்காக பிரபல இயக்குனர் கௌதம் மேனனின் மகன் ஆர்யன் யோஹான் அறிமுகமானார். இவர் நேற்று தனது முதல் பந்திலேயே விக்கெட் எடுத்து அசத்தியதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. மேலும் இந்த போட்டியில் நெல்லை அணி வெற்றி பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் தளபதி விஜய் நடிக்கும் ’யோஹன் அத்தியாயம் ஒன்று’ என்ற திரைப்படத்தை கௌதம் மேனன் இயக்குவதாக இருந்தது. இந்த படத்தின் டைட்டில் அவரது மகன் ஆர்யன் யோஹானை வைத்து தான் உருவாக்கப்பட்டது என்றும் கூறப்படுகிறது.
Catch-eh pudi vaithiyam continues! ????@NRKTNPL
— TNPL (@TNPremierLeague) June 25, 2022
Watch Shriram Capital TNPL on @StarSportsTamil @StarSportsIndia
Also, streaming live for free, only on Voot! Download the app now! #NammaOoruNammaGethu#TNPL2022#TNPLonVoot#TNPLonStarSportsTamil#SSvNRK pic.twitter.com/jWjpvcYz9X
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments