ஆன்மீக அரசியல் என்று சொல்லாமல்.. விஜய் பேச்சுக்கு தமிழ் இயக்குனர் வரவேற்பு..!
Send us your feedback to audioarticles@vaarta.com
ஆன்மீக அரசியல் என்று சொல்லாமல் பெரியார், அம்பேத்கர், காமராஜரை படியுங்கள் என்று விஜய் கூறியதை வரவேற்கிறேன் என தமிழ் இயக்குனர் கரு பழனியப்பன் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஜய் நேற்று 10,12-ம் வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கும் விழாவை நடத்தினார் என்பதும் இந்த விழாவில் கலந்து கொண்ட 1400 மாணவர்களுக்கும் அவரே நேரடியாக பரிசு கொடுத்து 12 மணி நேரம் இருந்தார் என்பதும் தெரிந்ததே.
இந்த நிலையில் நேற்றைய விழாவில் விஜய்யின் 10 நிமிட பேச்சு குறித்து பல அரசியல் தலைவர்கள் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இயக்குனர் கரு பழனியப்பன் விஜய் பேச்சு குறித்து கூறிய போது விஜய்யின் இன்றைய பேச்சு வரவேற்புக்குரியது ... ஆன்மீக அரசியல் என்று சொல்லாமல், அம்பேத்கர் பெரியார் காமராஜரை படியுங்கள் என்றார் .. அதைப் படித்தாலே அவர்கள் சரியாக வாக்களித்து விடுவார்கள்... நன்றி’ என்று கூறியுள்ளார்.
ஆன்மீக அரசியலை அறிமுகப்படுத்துவோம் என்று கூறிய ரஜினியை மறைமுகமாக தாக்கிய கரு பழனியப்பனின் இந்த பேச்சுக்கு ரஜினி ரசிகர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
விஜயின் இன்றைய பேச்சு வரவேற்புக்குரியது ...
— கரு பழனியப்பன் (@karupalaniappan) June 17, 2023
ஆன்மிக அரசியல் என்று சொல்லாமல், அம்பேத்கர் பெரியார் காமராஜரை படியுங்கள் என்றார் .. அதைப்படித்தாலே அவர்கள் சரியாக வாக்களித்துவிடுவார்கள்... நன்றி @actorvijay pic.twitter.com/8IngTMXdiu
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com