இதை முதலில் செய்வாரா விஜய்? பிரபல இயக்குனர் கேள்வி..!

  • IndiaGlitz, [Thursday,July 06 2023]

நடிகர் விஜய் அரசியலுக்கு வர இருப்பதாக கூறப்படும் நிலையில் அவரது அரசியல் வருகை குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் திரையுலகினர் தங்களது கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் பிரபல இயக்குனர் அமீர், விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் இதை முதலில் செய்ய வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் கூறிய போது ’தலைவர்கள் யாரும் வானத்திலிருந்து குதிப்பதில்லை, நம்மில் ஒருவர் தான் தலைவராக வருகிறார்கள்.. வாக்குக்கு பணம் வாங்கக்கூடாது என்று பெற்றோர்களிடம் சொல்ல வேண்டும் என்று சொல்வது மாதிரி, விஜய் தனது புதிய படத்திற்கு முதல் நாள் காட்சிக்கு 1500 ரூபாய் டிக்கெட் வாங்குவதும் நேர்மையற்ற செயல் தான் என்று சொல்ல வேண்டும்.

சமூகத்தை சரி செய்வதாக இருந்தால் எல்லாவற்றையும் செய்ய வேண்டும், மக்கள் ரொம்ப நாட்களாக தங்கள் வாழ்வியலை திரையரங்குகளில் அமைத்திருக்கிறார்கள், அதுதான் பெரிய சாபக்கேடு என்று தெரிவித்துள்ளார்.

இயக்குனர் அமீரின் இந்த கருத்துக்கு விஜய் தரப்பிலிருந்து என்ன பதில் வரப்போகிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

More News

ஆண் குழந்தைக்குத் தாயான 'சிம்பு' பட நடிகை… மகிழ்ச்சியாக வெளியிட்ட அறிவிப்பு!

நடிகர் சிம்பு நடித்த திரைப்படத்தில் ஹீரோயினாக அறிமுகமாகி தமிழ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற நடிகை சனா கான்

என் இளமையின் ரகசியம் இதுதான் - நதியா

IndiaGlitz வழங்கும் CII Dakshin 2023 நிகழ்ச்சி சமீபத்தில் சென்னையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் சினிமா துறையை சார்ந்த பல்வேறு நட்சத்திரங்கள் பங்குபெற்றனர்.

அழகுக்காக நடிகைகள் அறுவை சிகிச்சை செய்வது? ஓப்பனா பேசிய பிரபல நடிகை!

கோலிவுட் முதல் ஹாலிவுட் வரை நடிகைகள் பலரும் அழகுக்காக அறுவை சிகிச்சை செய்கிறார்கள் என்பதுபோன்ற தகவல்கள் அவ்வபோது வெளியாகி சர்ச்சையை கிளப்பி வருகின்றன.

விவாகரத்தை அறிவித்த மெகா ஸ்டார் குடும்பத்தின் வாரிசு நடிகை… அதிர்ச்சி தகவல்!

தெலுங்கு சினிமாவில் மெகா ஸ்டார் நடிகரான சிரஞ்சீவியின் தம்பி மகளும் பிரபல நடிகையுமான நிஹாரிகா தனது திருமண முறிவு குறித்து தகவல் வெளியிட்டுள்ளார்

சபரீஷ் நந்தா - வசந்த் ரவி இணையும் புதிய படத்திற்கு வாழ்த்து தெரிவித்த அமீர்..!

நயன்தாரா நடிப்பில் வெளியான ஐரா, மெட்ராஸ் டாக்கீஸ் தயாரிப்பில் உருவாகி பெரும் வரவேற்பை பெற்ற நவரசா போன்ற படங்களில் பணியாற்றிய சபரீஷ் நந்தா, தற்போது  இயக்குனராக அறிமுகமாகிறார்.