இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா? திருப்பதி லட்டு சர்ச்சையில் பொங்கி எழுந்த தமிழ் இயக்குனர்..!
Send us your feedback to audioarticles@vaarta.com
திருப்பதியில் பக்தர்களுக்கு வழங்கப்படும் லட்டு பிரசாதத்தில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கும் நிலையில், "இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா?" என தமிழ் இயக்குனர் தனது சமூக வலைத்தளத்தில் கோபமாக பதிவு செய்துள்ளார்.
உலகப் புகழ்பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு வரும் பக்தர்கள் அனைவருக்கும் லட்டு பிரசாதங்கள் வழங்கப்பட்டு வரும் நிலையில், இதில் விலங்குகளின் கொழுப்பு கலந்துள்ளதாக முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு குற்றம் சாட்டியது, பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
முந்தைய ஆட்சியாளர், அதாவது ஜெகன் மோகன் ரெட்டி ஆட்சி காலத்தில், திருப்பதியின் புனிதம் கெட்டு விட்டதாகவும், அங்கு வழங்கப்படும் லட்டுக்கு சுத்தமான நெய் பயன்படுத்துவதற்கு பதிலாக விலங்குகளின் கொழுப்பு பயன்படுத்தப்பட்டதாகவும் கூறியிருந்தது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதுகுறித்து பலர் தங்களது கருத்துகளை தெரிவித்து வரும் நிலையில், தமிழ் இயக்குனர் மோகன் ஜி, தனது சமூக வலைதளத்தில் இதைப் பற்றி கூறியுள்ளார். அவர் கூறியதாவது:
திருப்பதி லட்டு எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள் என கோபமாக பதிவிட்டுள்ளார்.
#TirupatiLaddu எப்படி மனசாட்சி துளி கூட இல்லாம இத்தனை கோடி மக்கள் நம்பிக்கையில் விளையாடி இருக்கீங்க.. வைணவ முத்திரை வாங்கியவர்கள் எத்தனை லட்சம் பேர் புனிதமாக வாழ்ந்து வருகிறார்கள்.. கொடுரமான தண்டனை வழங்க வேண்டும் இதை செய்த கொடிய மிருகங்களுக்கு.. இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்கள். pic.twitter.com/tTmKzSppHk
— Mohan G Kshatriyan (@mohandreamer) September 19, 2024
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout