எப்படியாவது மீட்புப்பணியை மேற்கொள்ளுங்கள்: தென்மாவட்ட வெள்ளம் குறித்து பிரபல இயக்குனர்..!
- IndiaGlitz, [Monday,December 18 2023]
கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி மற்றும் தென்காசி ஆகிய நான்கு மாவட்டங்களில் கனமழை பெய்து பெரு வெள்ளம் ஏற்பட்டுள்ளதால் லட்சக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழக அரசு, மீட்பு படையினர் துணையுடன் மீட்பு பணிகளை கவனித்து வந்த போதிலும் பல இடங்களில் இன்னும் மீட்பு நடவடிக்கை எடுக்க முடியாத அளவுக்கு வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுவதாக கூறப்படுகிறது. \
இந்த நிலையில் இயக்குனர் மாரி செல்வராஜ் தனது சமூக வலைத்தளத்தில் எப்படியாவது அந்த மக்களை மீட்டெடுங்கள் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். இது குறித்து அவருக்கு ஒரு இருப்பதாவது:
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை அளிக்க கூடியதாக இருக்கிறது.
மீட்பு வாகனங்களால் படகுகளால் எதிலும் உள்ளே செல்ல முடியவில்லை . வெள்ளத்தின் வேகம் அப்படியிருக்கிறது. ஆதிநாதபுரம், செம்பூர், கரையடியூர் , பிள்ளமடையூர், மாநாட்டூர், கல்லாம்பறை, தேமான்குளம், மணத்தி, இராஜபதி, குருவாட்டூர், குரும்பூர் ,குட்டக்கரை, தென்திருப்பேரை மேலகடம்பா, இப்படி இருபதுக்கும் மேற்பட்ட கிராமங்களை தொடர்புகொள்ளவே முடியவில்லை.
இந்த கிராமங்கள் எல்லாமே ஆற்றிற்கும் குளத்திற்கும் நடுவே உள்ள விவசாய வயல்வெளி கிராமங்கள், இதை கருத்தில்கொண்டு எதன் வழியாவது மீட்புபணிகளை மிக துரிதமாக மேற்கொள்ள வேண்டுகிறேன்.
வரலாறு காணாத பேரிடரில் தென் தமிழகம் சிக்கியிருக்கிறது. தூத்துக்குடி மாவட்டம் முழுவதுமாக துண்டிக்கபட்டிருக்கிறது. கிராமங்களை சுற்றியுள்ள எல்லா குளங்களும் உடைபட்டிருக்கிறது. ஶ்ரீவைகுண்டத்துக்கு கிழக்கே உள்ள ஆற்றுபாசனத்திற்கு உட்பட்ட அத்தனை கிராமங்களின் நிலையையும் அவ்வளவு கவலை…
— Mari Selvaraj (@mari_selvaraj) December 18, 2023