மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தி: 'துணிவு' படம் குறித்து பிரபல இயக்குனர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் நேற்று வெளியான நிலையில் நேற்று முதல் நாளில் இந்த படம் உலகம் முழுவதும் 30 கோடி ரூபாய் வசூல் செய்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. மேலும் இந்த படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனங்கள் குவிந்து வருகிறது என்பதும் தற்போதைய ஒரு சமுதாய பிரச்சனையை மிகவும் தைரியமாக ஒரு மாஸ் நடிகரை வைத்து கூறியுள்ளதால் இந்த செய்தி அடிமட்ட பொதுமக்கள் வரை சென்றடையும் என்றும் விமர்சனங்கள் தெரிவிக்கின்றன.
ஒரு நாட்டின் நம்பிக்கைக்கு உரிய அமைப்புகளில் ஒன்று வங்கிகள் என்ற நிலையில், அந்த வங்கிகளே பொதுமக்களின் பணத்தை கொள்ளையடித்து வருவது குறித்த விலாவாரியான ஆய்வுகள் நடத்தி எச் வினோத் திரைக்கதை எழுதியுள்ளார் என்பதும் இந்த படத்தை ஒவ்வொரு குடிமக்களும் பார்த்து வங்கிகள் மோசடி குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் கூறப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் தமிழ் திரை உலகின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான வசந்த பாலன் இந்த படத்திற்கு பாராட்டு தெரிவித்து தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
மக்களுக்கு ஒரு விழிப்புணர்வு செய்தியுடன் விறுவிறுப்பான ஆக்சன் திரைப்படம். அஜீத் அவர்களின் கதாபாத்திர வடிவமைப்பும் வசனமும் திரையரங்கைக் களிப்பிற்குள்ளாக்குகிறது. பணம் சம்மந்தமாக இன்னொரு பொருளாதார அடியாளின் வாக்குமூலம் இயக்குநர் H.விநோத் உட்பட்ட மொத்த படக்குழுவிற்கும் என் வாழ்த்துகள்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments