பாஜகவில் இருந்து வெளியேறினாரா பிரபல இயக்குனர்: அவரே அளித்த விளக்கம்!
Send us your feedback to audioarticles@vaarta.com
நடிகை காயத்ரி ரகுராம் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பாஜகவில் இருந்து விலகிய நிலையில் பிரபல பெண் இயக்குனர் ஒருவரும் பாஜகவிலிருந்து விலகி உள்ளதாக ஒரு சில இணையதளங்களில் செய்தி வெளியாகியுள்ள நிலையில் அந்த செய்தி அவர் விளக்கமளித்துள்ளார்.
தமிழ் திரையுலகில் குணசித்திர நடிகை மற்றும் இயக்குனராக இருந்து வருபவர் லட்சுமி ராமகிருஷ்ணன். இவர் பல திரைப்படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து உள்ளார் என்றும் ’ஆரோகணம்’, ‘நெருங்கிவா முத்தமிடாதே’ ‘அம்மணி’ ஓனர்’ ஆகிய திரைப்படங்களை இயக்கி உள்ளார் என்பதும் தெரிந்ததே. மேலும் தற்போது இசைஞானி இளையராஜாவின் இசையில் உருவாகிவரும் ’ ஆர் யூ ஓகே பேபி’ என்ற படத்தை இயக்கி வருகிறார்.
இந்த நிலையில் கடந்த சில மணி நேரங்களாக நடிகையும் இயக்குனருமான லட்சுமி ராமகிருஷ்ணன் பாஜகவிலிருந்து விலகி விட்டதாக செய்திகள் வெளியாகி கொண்டிருக்கின்றன. இந்த செய்தி குறித்து நடிகை லட்சுமி ராமகிருஷ்ணன் தனது சமூக வலைத்தளத்தில் கூறியபோது, ‘நான் பாஜகவில் இணையவே இல்லை, அதற்குள் எப்படி என்னால் வெளியே வர முடியும்? செய்திகளை திரித்து தவறாக மேற்கோள் காட்டுவது தான் இன்றைய பத்திரிகையின் தரம். அண்ணாமலை சொல்வது சரிதான். ஊடகங்கள் சில ஒழுக்கத்தை வளர்த்துக் கொள்ளாத வரை மற்றவர்களை கேள்வி கேட்கும் தகுதி அவர்களுக்கு இல்லை’ என்று தெரிவித்து உள்ளார். அவருடைய இந்த பதிவால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
I never joined #BJP then how can I come out? This is the quality of journalism these days, distorting, misquoting ! What @annamalai_k said in the argument is right , unless media develops some discipline, they don’t have eligibility to question others. @AMuktharAhmed1 pic.twitter.com/Zy83qu0YwJ
— Lakshmy Ramakrishnan (@LakshmyRamki) January 8, 2023
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments