தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தல்: வெற்றி பெற்றது யார்?

தமிழ் திரைப்பட இயக்குநர் சங்கத் தேர்தல் நேற்று நடைபெற்ற நிலையில் நேற்று இரவு வெற்றி பெற்றது யார் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தமிழ் திரைப்பட இயக்குனர் சங்க தேர்தலில் கே பாக்யராஜ் தலைமையிலான இமயம் அணி மற்றும் ஆர்கே செல்வமணி தலைமையிலான புதுவசந்தம் அணி போட்டியிட்டன.

இந்த தேர்தலில் வாக்குப்பதிவு நேற்று காலை 8 மணி முதல் தொடங்கிய நிலையில் மாலை 4 மணிக்கு வாக்குப்பதிவு முடிவடைந்தது. அதன் பின்னர் வாக்குகள் எண்ணப்பட்டன .

இந்த தேர்தலில் 1521 வாக்குகள் பதிவு பெற்றதாக அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் நேற்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இந்த முடிவில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட ஆர்கே செல்வமணி 955 வாக்குகள் பெற்று வெற்றி பெற்று மீண்டும் இயக்குனர் சங்க தலைவர் ஆகிறார். தலைவர் பதவிக்கு போட்டியிட்ட கே பாக்யராஜ் 566 வாக்குகள் மட்டுமே பெற்று தோல்வி அடைந்தார். இதனையடுத்து வெற்றி பெற்ற ஆர்கே செல்வமணியின் புது வசந்தம் அணிக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
 

More News

அருண் விஜய்யின் 'யானை' ரிலீஸ் தேதி அறிவிப்பு!

அருண் விஜய் நடிப்பில் இயக்குனர் ஹரியின் இயக்கத்தில் உருவாகி வரும் 'யானை' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட்

'அஜித் 61' படத்தின் முக்கிய ரகசியத்தை கூறிய எச். வினோத்!

 அஜித் நடிப்பில் எச் வினோத் இயக்கிய 'வலிமை' திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களையும் தாண்டி வசூலை குவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம்

பரோட்டாவிற்கு மாவு பிசையும் டான்ஸ்: புளூசட்டை மாறனின் விமர்சனத்திற்கு தயாரிப்பாளர் கண்டனம்!

அஜித் நடித்த 'வலிமை' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் ஒன்றை விமர்சனம் செய்த ப்ளூ சட்டை மாறனுக்கு பிரபல தயாரிப்பாளர் ஒருவர் கண்டனம் தெரிவித்துள்ளார் .

சூப்பர் ஸ்டார் ரஜினியின் அவதாரமாக மாறிய தல தோனி: வைரல் வீடியோ

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனுமான எம்எஸ் தோனியின் புதிய கிராபிக்ஸ் நாவல் சமீபத்தில் வெளியானது என்பதும் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்

சொகுசு படகில் சென்ற பிரபல நடிகை மர்ம மரணம்: கொலையா? விபத்தா? என விசாரணை

பிரபல நடிகை ஒருவர் சொகுசு படகில் சுற்றுலா சென்றிருந்த நிலையில் திடீரென மர்மமான முறையில் மரணம் அடைந்திருப்பதை அடுத்து அவர் கொலை செய்யப்பட்டாரா? அல்லது விபத்தா?