மனைவிக்கு ஒமிக்ரான், தனக்கு கொரோனா: பிரபல தமிழ் இயக்குனர் தகவல்

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவருடைய மனைவிக்கு ஒமிக்ரான் தொற்று பாதிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் தகவல் வெளிவந்துள்ளது.

தமிழ் திரையுலகின் பிரபல இயக்குனர்களில் ஒருவரான செல்வராகவனின் மனைவி கீதாஞ்சலிக்கு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒமிக்ரான் தொற்று உறுதி செய்யப்பட்டது என்பதும் இதனை அடுத்து அவர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார் என்பதும் தெரிந்ததே.

இந்த நிலையில் செல்வராகவன் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் தனக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் மருத்துவர்களின் ஆலோசனைப்படி தனிமைப்படுத்தி சிகிச்சை பெற்று வருவதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும் தன்னுடன் சில நாட்களாக தொடர்பில் இருந்தவர்கள் உடனடியாக பரிசோதனை செய்து கொள்ளுங்கள் என்றும் அவர் அறிவித்துள்ளார். மேலும் அனைவரும் மாஸ்க் அணிந்து பாதுகாப்பாக இருங்கள் என்றும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

செல்வராகவன் மற்றும் அவருடைய மனைவி இருவருக்குமே கொரோனா மற்றும் ஒமிக்ரான் வைரஸ் பாதித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

More News

கே.டி.குஞ்சுமோனின் 'ஜெண்டில்மேன் 2' இசையமைப்பாளர் அறிவிப்பு!

பிரபல தயாரிப்பாளர் கேடி குஞ்சுமோன் 'ஜென்டில்மேன் 2' என்ற படத்தை நீண்ட இடைவெளிக்கு பின்னர் தயாரிக்க இருக்கிறார் என்பதும் இந்த படத்தின் இசையமைப்பாளர் யார் என யூகித்து சொல்பவர்களுக்கு

ரீ எண்ட்ரி கொடுத்த நடிகை மீரா ஜாஸ்மின்… க்யூட்டான புகைப்படம் வைரல்!

மலையாளம் மற்றும் தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம்வந்த

காதலியை கரம்பிடித்த பிரபல இந்தியக் கிரிக்கெட் வீரர்… வைரலாகும் புகைப்படம்!

இந்தியக் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளராக இருந்துவரும்

சுனாமியை ஜெயித்த மாற்றுத்திறனாளி… 27 மணிநேரம் கடலில் நீந்தி தப்பித்த சம்பவம்!

சமீபத்தில் ஆஸ்திரேலியாவிற்கு அருகேவுள்ள தெற்கு பசிபிக் பெருங்கடலை

அல்லு அர்ஜூனின் 'புஷ்பா 2' ரிலீஸ் எப்போது?

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படம் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் வெளியானது என்பதும் இந்த படம் தமிழ் உள்பட கிட்டத்தட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி