கேப்டன் சார், எங்காத்தா மீனாட்சி அம்மன் உங்களை குணப்படுத்துவாங்க: பிரபல காமெடி நடிகர் டுவிட்
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழ் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் தனது டுவிட்டர் பக்கத்தில் கேப்டன் விஜயகாந்த் அவர்களை எங்க ஆத்தா மீனாட்சி குணப்படுத்துவாங்க என டுவிட் செய்திருப்பது வைரலாகி வருகிறது.
கடந்த சில ஆண்டுகளாக கேப்டன் விஜயகாந்த் அவர்கள் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வருகிறார். சமீபத்தில் கூட அவர் சென்னையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார் என்பதும் நீரிழிவு நோய் காரணமாக அவரது கால் விரல்கள் அகற்றப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகின
இந்த நிலையில் தற்போது விஜயகாந்த் அவர்கள் டிஸ்சார்ஜ் ஆகி வீட்டிற்கு திரும்பியுள்ள நிலையில், தான் குணமாக பிரார்த்தித்த அனைவருக்கும் நன்றி என அறிக்கை வெளியிட்டுள்ளார்
இந்த நிலையில் கேப்டன் விஜயகாந்த் குறித்து தமிழ்த் திரையுலகின் பிரபல காமெடி நடிகர் சூரி தனது டுவிட்டரில் கூறியிருப்பதாவது: தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எல்லாருக்குமான அண்ணசத்திரமா இருந்துச்சு! கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செய்த புண்ணியமும் எங்காத்தா மீனாட்சி அம்மனும் உங்களை விரைவில் குணப்படுத்தும்!
தங்கமான மனுசன், உதவின்னு யார் கேட்டாலும் வாரிவழங்கிய கர்ணன்; ஒரு காலத்தில் அவர் ஆஃபீஸ்ல அடுப்பு எரியாத நாளே இல்ல, எல்லாருக்குமான அண்ணசத்திரமா இருந்துச்சு! கேப்டன் விஜயகாந்த் சார், நீங்க செய்த புண்ணியமும் எங்காத்தா மீனாட்சி அம்மனும் உங்களை விரைவில் குணப்படுத்தும்! pic.twitter.com/lrmX0Xh22F
— Actor Soori (@sooriofficial) June 25, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com