பாஜகவில் இருந்து விலகி பிராமணர் கட்சி தொடங்க போகிறேன்: காமெடி நடிகர் பேட்டி..!
- IndiaGlitz, [Sunday,June 18 2023]
பாஜகவில் இருந்து விலகி பிராமணர் கட்சி தொடங்கப் போகிறேன் என தமிழ் காமெடி நடிகர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
தமிழ் திரையுலகின் காமெடி நடிகராக இருந்து வருபவர் எஸ்வி சேகர். இவர் கடந்த சில மாதங்களாகவே பாஜக தலைவர் அண்ணாமலையுடன் கருத்து வேறுபாடில் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் சற்று முன் அவர் செய்தியாளர்களை சந்தித்தபோது தமிழ்நாட்டில் விரைவில் பிராமணர்களுக்கு என்று ஒரு கட்சி உருவாகிறது என தெரிவித்துள்ளார். அவர் மேலும் கூறும்போது, ‘இந்த கட்சி தேர்தல் ஆணையத்தில் அங்கீகாரம் பெற்று விட்டது. கூடிய சீக்கிரம் இது குறித்து அறிவிப்பை வெளியிடுவோம்.
தமிழ்நாட்டில் 2024 ஆம் ஆண்டு தேர்தலில் 40 தொகுதிகளில் 33 தொகுதிகளில் பிராமண வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள். பிராமணர்கள் மட்டும் எங்கள் கட்சிக்கு ஓட்டு அளித்தால் போதும், ஏனெனில் இந்த ஓட்டை வைத்து நாங்கள் வெற்றி பெற திட்டமிடவில்லை, தமிழ்நாட்டில் பிராமணர்கள் எண்ணிக்கை எவ்வளவு இருக்கின்றது என்ற தகவல் அரசாங்கத்திடமே இல்லை, அந்த எண்ணிக்கை தெரிந்து கொள்வதற்காக நாங்கள் போட்டியிடுகிறோம்
தமிழ்நாட்டில் பிராமணர்கள் 48 லட்சம் பேர் இருப்பதாக கருதப்படுகிறது. அவர்களில் 10 லட்சம் பேர் ஓட்டு போட்டால் போதும். தமிழ்நாட்டில் ஆளுங்கட்சி வாங்கும் வாக்குக்கும் எதிர்க்கட்சி வாக்குக்கும் இடையே ஒன்றரை லட்சம் ஓட்டு தான் வித்தியாசம் உள்ளது. ஆனால் எங்கள் பிராமணர்கள் 10 லட்சம் பேர் ஓட்டு போட்டாலே ஒரு ஆட்சியை மாற்ற கூடிய வலிமை எங்களுக்கு வந்துவிடும்.
இந்த கட்சி தொடங்குவது குறித்து அதிகாரபூர்வ முடிவு எடுத்தவுடன் மோடியிடம் சென்று அனுமதி பெற்று பாஜகவில் இருந்து விலகிவிடுவேன். என்னால் இரண்டு குதிரைகளில் சவாரி செய்ய முடியாது’ என்று தெரிவித்தார். அவரது இந்த பேட்டி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
சமத்துவ ஒற்றுமை தேசியவாத தமிழ் பிராமண பார்வை 👍🏾🧶🇮🇳🚩💪 வாழ்க தமிழ், தமிழ் மண்ணுக்கு தலைவணங்குவோம். ஜெய் ஹிந்த்.
— Gayathri Raguramm 🇮🇳 (@Gayatri_Raguram) June 18, 2023
pic.twitter.com/3V5YlBm21H