மகேஷ்பாபு-முருகதாஸ் படத்தில் இணைந்த இன்னொரு பிரபல காமெடி நடிகர்

  • IndiaGlitz, [Tuesday,January 17 2017]

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடித்து வரும் ஆக்சன் படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ள நிலையில் பிரபல காமெடி நடிகர் பிரேம்ஜி, இந்த படத்தில் தற்போது இணைந்துள்ளார்.

தமிழ், தெலுங்கு என இரண்டு மொழிகளில் தயாராகி வரும் இந்த படத்தின் தமிழ் பதிப்பில் மட்டும் பிரேம்ஜி நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே இந்த படத்தில் பிரபல காமெடி நடிகர் ஆர்ஜே பாலாஜி நடித்து வரும் நிலையில் தற்போது பிரேம்ஜியும் இணைந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மகேஷ்பாபு, ராகுல்ப்ரித்திசிங், எஸ்.ஜே.சூர்யா உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைக்கின்றார். சந்தோஷ் சிவன் ஒளிப்பதிவில், ஸ்ரீகர்பிரசாத் படத்தொகுப்பில் உருவாகி இந்த படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.