தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளருக்கு கொரோனா: கோலிவுட் அதிர்ச்சி
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது தெரிந்ததே. தினமும் தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அதே போல் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தினமும் தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
இந்த நிலையில் கொரோனா வைரஸால் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம்
இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டதாகவும், இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது இதனால் கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது
தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் அவர்கள் தமிழில் தேவி, போகன், எல்கேஜி, கோமாளி, தேவி 2, எனை நோக்கி பாயும் தோட்டா’ சீறு உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பதும், தற்போது அவர் ஜோஸ்வா இமைபோல் காக்க’, மூக்குத்தி அம்மன், துருவநட்சத்திரம், போன்ற படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது
Producer @isharikganesh tests positive for #COVID19 pic.twitter.com/aK0IfovEXy
— Chennai Times (@ChennaiTimesTOI) August 29, 2020
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com