தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளருக்கு கொரோனா: கோலிவுட் அதிர்ச்சி

  • IndiaGlitz, [Saturday,August 29 2020]

தமிழகத்தில் நாளுக்கு நாள் கொரோனா வைரஸ் பாதிப்பு அதிகரித்து கொண்டே செல்கிறது என்பது தெரிந்ததே. தினமும் தமிழகத்தில் 5 ஆயிரத்துக்கும் அதிகமானோர் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு வருகின்றனர் என்பதும் அதே போல் நூற்றுக்கும் அதிகமானோர் பலியாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது. இருப்பினும் தினமும் தமிழகத்தில் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவில் இருந்து குணமாகி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் கொரோனா வைரஸால் எம்எல்ஏக்கள், எம்பிக்கள், அமைச்சர்கள் மட்டுமின்றி திரையுலகைச் சேர்ந்தவர்களும் சிலர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்கள் என்பதை அவ்வப்போது பார்த்து வருகிறோம் 

இந்த நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி தயாரிப்பாளரான ஐசரி கணேஷ் அவர்களுக்கு கொரோனா பாசிட்டிவ் ஏற்பட்டதாகவும்,  இதனையடுத்து அவர் சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது இதனால் கோலிவுட் திரையுலகமே அதிர்ச்சியில் மூழ்கியுள்ளது

தயாரிப்பாளர் ஐசரி கணேஷ்  அவர்கள் தமிழில் தேவி, போகன், எல்கேஜி, கோமாளி, தேவி 2,  எனை நோக்கி பாயும் தோட்டா’ சீறு உள்பட பல திரைப்படங்களை தயாரித்துள்ளார் என்பதும், தற்போது அவர் ஜோஸ்வா இமைபோல் காக்க’, மூக்குத்தி அம்மன், துருவநட்சத்திரம், போன்ற படங்களை தயாரித்து வருகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது

 

Producer @isharikganesh tests positive for #COVID19 pic.twitter.com/aK0IfovEXy

— Chennai Times (@ChennaiTimesTOI) August 29, 2020

More News

வடகொரிய அதிபர் மரணம்? சந்தேகத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கும் முக்கியத் தகவல்!!!

கடந்த சில தினங்களுக்கு முன்பு வடகொரியாவின் அதிபர் கிம் ஜாங் உன் கோமாவில் இருக்கிறார்

டெல்லியில் பறிமுதல் செய்யப்பட்ட 504 தங்கக்கட்டிகள்!!! பரபரப்பான கடத்தல் பின்னணி!!!

டெல்லி ரயில்வே நிலையத்தில் நேற்று வருவாய் புலனாய்வுத் துறை அதிகாரிகள் 504 தங்கக்கட்டிகளை பறிமுதல் செய்ததாகப் பரபரப்பு தகவல் வெளியாகி இருக்கிறது

சுரேஷ் ரெய்னாவை அடுத்து தீபக் சஹாரும் நாடு திரும்புகிறாரா? என்ன ஆச்சு சிஎஸ்கே அணிக்கு?

2020ஆம் ஆண்டில் ஐபிஎல் போட்டிகள் இன்னும் ஒரு சில நாட்களில் தொடங்க உள்ள நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி உள்பட 8 அணி வீரர்களும் சமீபத்தில் துபாய் சென்றுள்ளனர்.

17 வயது சிறுமி பாலியல் பலாத்காரம்: தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான மாப்பிள்ளை

17 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு வேறொரு பெண்ணை திருமணம் செய்ய இருந்த இளைஞர் ஒருவர், தாலி கட்டுவதற்கு சில நிமிடங்களுக்கு முன் கைதான சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது 

மனிதக்கடவுளுக்கே எங்கள் ஓட்டு: 'பிகில்' பாணியில் முதல்வருக்கு மாணவர்களின் முழுபக்க விளம்பரம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக பல்வேறு தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில் சமீபத்தில் இறுதியாண்டு செமஸ்டர் தேர்வு தவிர மற்ற அனைத்து தேர்வுகளும் ரத்து செய்யப்படுவதாகவும்