வெற்றி பெற்ற விஜய் சேதுபதியின் 50வது படம்.. மற்ற நடிகர்களின் 50வது படங்கள் என்ன தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடித்த 50வது திரைப்படம் ‘மகாராஜா’ நேற்று வெளியாகி வெற்றி பெற்றுள்ள நிலையில் தமிழ் திரை உலகில் பிரபல நடிகர்களின் 50வது படங்கள் என்னென்ன? அந்த படங்கள் வெற்றி பெற்றதா? என்பதை பார்ப்போம்.
மக்கள் திலகம் எம்ஜிஆர் நடித்த 50வது திரைப்படம் ’தாய் சொல்லை தட்டாதே’. கடந்த 1961 ஆம் ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல் நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 50வது படம் ’சபாஷ் மீனா’. சிவாஜி மற்றும் சந்திரபாபு முக்கிய வேடத்தில் நடித்த இந்த படம் 1958 ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி படமாக அமைந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த 50வது படம் என்டி ராமராவின் ’டைகர்’ என்ற தெலுங்கு படம். இந்த படத்தில் ரஜினிகாந்த் இரண்டாவது கதாநாயகனாக நடித்திருந்தார். உலகநாயகன் கமல்ஹாசனுக்கு 50வது படம் ’மூன்று முடிச்சு’. கே பாலச்சந்தர் இயக்கத்தில் கமல்ஹாசன், ரஜினிகாந்த், ஸ்ரீதேவி நடித்த இந்த படம் 1976 ஆம் ஆண்டு வெளியானது கமல், ரஜினி ஆகிய இருவருக்குமே 50வது படம் வெற்றி படமாகும்.
கேப்டன் விஜயகாந்த் நடித்த 50வது படம் ’ஈட்டி’ என்பதும் சரத்குமார் நடித்த 50வது படம் ’கூலி’ என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் சுமாரான வெற்றியை பெற்றது. இதனை அடுத்து அஜித் நடித்த 50வது படம் ’மங்காத்தா’. கடந்த 2019 ஆம் ஆண்டு வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவான இந்த படம் அஜித்தின் மிகப்பெரிய வெற்றி படங்களில் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.
அதேபோல் தளபதி விஜய்க்கு 50வது படமாக ’சுறா’ என்ற படம் அமைந்த நிலையில் இந்த படம் அவருக்கு எதிர்பார்த்த வெற்றியை கொடுக்கவில்லை. நடிப்பு அரக்கன் சியான் விக்ரம் 50வது படம் ’ஐ’. இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவான இந்த படம் நல்ல வரவேற்பு பெற்றது. அதேபோல் மாதவன் நடித்த 50வது படம் ’வேட்டை’ என்பதும் லிங்குசாமி இயக்கத்தில் உருவான இந்த படமும் நல்ல வரவேற்பு பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் தனுஷ் தற்போது ’ராயன்’ என்ற தனது 50வது படத்தை நடித்துள்ளது மட்டுமின்றி அதை இயக்கியும் உள்ளார் என்பது தெரிந்தது. அதேபோல் பரத் தனது 50வது படமான லவ் என்ற படத்தில் நடித்து வருகிறார் என்பதும் வாணி போஜன் இந்த படத்தில் நாயகியாக நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு படங்களும் வெற்றி பெறுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.
தற்போது மாஸ் நடிகர்கள் வருடத்திற்கு ஒன்று அல்லது இரண்டு படங்கள் மட்டுமே நடிப்பதால் 100வது படம் என்ற இலக்கை தொட வாய்ப்பு குறைவு என்பதால் 50வது படம் தான் முக்கியத்துவமாக கருதப்படுகிறது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments