ரஜினியை அடுத்து 'லவ் டுடே' இயக்குனருக்கு வாழ்த்து கூறிய மாஸ் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் வெளியான ’லவ் டுடே’ திரைப்படம் மிகப் பெரிய வெற்றி பெற்று வசூலில் சாதனை செய்துவரும் நிலையில் இந்த படத்தின் இயக்குநர் பிரதீப் ரங்கநாதனுக்கு திரையுலகினர் வாழ்த்துக்களை குவித்து வருகின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவின் மாஸ் நடிகர் ஒருவர் ’லவ் டுடே’ இயக்குனருக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
’கோமாளி’ என்ற திரைப்படத்தின் மூலம் திரையுலகில் அறிமுகமான பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக ‘லவ் டுடே’ என்ற படத்தை தானே நடித்து இயக்கி இருந்தார். இந்த படம் மிகப்பெரிய வெற்றி பெற்றுள்ளது என்பதும் குறிப்பாக இளைஞர்கள் மத்தியில் இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தின் மொத்த பட்ஜெட் 5 கோடி ரூபாய் என்று கூறப்படும் நிலையில் தற்போது வரை இந்த படம் ரூ.30 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்திருப்பதாகவும் இதனால் இந்த படத்தை வெளியிட்ட விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்கு உரிமையாளர்கள் மிகப்பெரிய லாபத்தை சம்பாதித்து உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் லவ் டுடே இயக்குனருக்கு ஒட்டுமொத்த திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வரும் நிலையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் பிரதீப் ரங்கநாதனை தனது வீட்டிற்கு அழைத்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இது குறித்த புகைப்படங்கள் வைரலானது.
இந்த நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை அடுத்து தற்போது நடிகர் சிம்பு பிரதீப் ரங்கநாதனுக்கு பூங்கொத்து அனுப்பி வாழ்த்து தெரிவித்துள்ளார். ‘லவ் டுடே’ படத்தின் அமோக வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் என்று பதிவு செய்துள்ளார். இது குறித்த வீடியோவை பிரதீப் ரங்கநாதன் தனது சமூக வலைதளத்தில் பதிவு செய்து ’சிம்புவுக்கு நன்றி தெரிவித்ததோடு உங்களது முதல் போன்கால் எனக்கு மிக்க மகிழ்ச்சியை தந்தது, உங்கள் ஆதரவுக்கு நன்றி’ என்று தெரிவித்துள்ளார்.
Thankyou STR @SilambarasanTR_ this ❤️ Your support for me and #LoveToday meant a lot to me from the first phone call u made . Im really happy . Thankyou so much sir . pic.twitter.com/akdwIWF4ey
— Pradeep Ranganathan (@pradeeponelife) November 13, 2022
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com