நடிகைகளை அடுத்து மாலத்தீவு சென்ற பிரபல தமிழ் நடிகர்!
Send us your feedback to audioarticles@vaarta.com
கடந்த சில மாதங்களாக தமிழ் நடிகைகள் பலர் மாலத்தீவுக்கு சென்று வந்தனர் என்பதும் அங்கிருந்து பதிவு செய்யப்பட்ட அழகான மற்றும் கவர்ச்சியான புகைப்படங்களை அவர்கள் தங்களது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்தனர் என்பதும் தெரிந்ததே.
பிரபல நடிகை காஜல் அகர்வால் தனது கணவருடன் தேனிலவுக்கு சென்றதும் மாலத்தீவு தான் என்பது குறிப்பிடத்தக்கது. அவரை தொடர்ந்து பிரணிதா சுபாஷ், வேதிகா, ரகுல் ப்ரீத்தி சிங், சமந்தா, ஹன்சிகா உள்பட ஒருசில நடிகைகள் மாலத்தீவுக்கு சென்று வந்தனர்.
இந்த நிலையில் தற்போது நடிகைகளை அடுத்து பிரபல தமிழ் நடிகர் விஷ்ணுவிஷால் மாலத்தீவுக்கு சென்றுள்ளார். இதுகுறித்து அவர் தனது சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார். தற்போது நடித்துக் கொண்டிருக்கும் ’எப்ஐஆர்’ படத்தின் டப்பிங் பணியை முடித்துவிட்டு மாலத்தீவுக்கு சுற்றுலா சென்றதாகவும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது வைரல் ஆகி வருகின்றன.
விஷ்ணுவிஷால் தற்போது ‘காடன்’, ‘ஆரண்யா’, ‘ஜகஜ்ஜால கில்லாடி’, மோகன் தாஸ்’ ஆகிய படங்களில் நடித்து வருகிறார் என்பதும் இந்த படங்கள் விரைவில் வெளியாகவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
After finishing the dubbing of #FIR off to #Maldives....#MuchNeededBreak#VVgang#PaidHoliday #NotAHolidayPromotion ?? pic.twitter.com/oWuyXA2F1J
— VISHNU VISHAL - V V (@TheVishnuVishal) February 22, 2021
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com
Comments