'அஜித் 61' படத்தில் இணையும் பிரபல ஹீரோ?

அஜித் நடிக்கவுள்ள அடுத்த திரைப்படத்தில் ஏற்கனவே ஒரு சில பிரபலங்கள் இணைந்து நடிக்க உள்ளதாக செய்திகள் வெளிவந்த நிலையில் தற்போது தமிழ் ஹீரோ ஒருவர் இணைய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

அஜித் நடித்த ‘வலிமை’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நெகட்டிவ் விமர்சனங்களை தாண்டி வசூலை குவித்து வருகிறது என்பதை பார்த்து வருகிறோம். இந்த நிலையில் அஜித் நடிக்கவிருக்கும் அடுத்த திரைப்படமான ’அஜித் 61’ திரைப்படத்தின் படப்பிடிப்பு வரும் மார்ச் மாதம் ஹைதராபாத்தில் நடைபெற உள்ளது. இதற்கான செட் அமைக்கும் பணிகள் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன .

இந்த நிலையில் இந்த படத்தில் ஏற்கனவே மோகன்லால், பிரகாஷ்ராஜ், தபு ஆகியோர் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியான நிலையில் தற்போது தமிழ் சினிமாவின் ஹீரோக்களில் ஒருவரான கவின் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.