தமிழகம் வந்துள்ள அமித்ஷாவை சந்திக்கும் திரையுலக பிரபலங்கள்.. யார் யார் தெரியுமா?
Send us your feedback to audioarticles@vaarta.com
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று தமிழகம் வந்திருக்கும் நிலையில் அவரை சந்திக்கும் 24 நபர்களில் சில திரையுலக பிரபலங்கள் இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன.
மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள் பயணமாக இன்று சென்னை வந்துள்ளார். சென்னை விமான நிலையத்திலிருந்து அவர் கிண்டியில் உள்ள நட்சத்திர விடுதிக்கு சென்றார். இந்த நிலையில் அவரை தமிழகத்தைச் சேர்ந்த 24 பிரபலங்கள் சந்திப்பதற்கு அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளன. இதில் திரைப்பட இயக்குனர் ஆர்கே செல்வமணி, இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் அபிராமி ராமநாதன் ஆகியோர்களும் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் அமித்ஷாவை பெரம்பலூர் எம்பி பாரிவேந்தர், ஐஜேகே தலைவர் ரவி பச்சமுத்து, புதிய நீதிக்கட்சி தலைவர் ஏ.சி.சண்முகம், ஆற்காடு நவாப் முகமது அலி, முன்னாள் ஹாக்கி வீரர் பாஸ்கரன், தொழிலதிபர்கள் நல்லி குப்புசாமி, சீனிவாசன், பி.ஆர்.ராஜன், பிருந்தா ரெட்டி ஆகியோர்களும் சந்திக்கவுள்ளனர்.
மேலும் தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை உட்பட பல பிரபலங்களை சந்திக்கும் அமித்ஷா மக்களவை தேர்தலை எதிர்கொள்வது மற்றும் கூட்டணி தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது குறித்து ஆலோசனை செய்வார் என்று கூறப்படுகிறது. மேலும் நாளை வேலூரில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் அமித்ஷா கலந்து கொண்டு பேச உள்ளார் என்பதும் இதையடுத்து பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments