இன்று ஜனநாயக கடமையாற்றிய தமிழ் திரையுலக பிரபலங்கள்: புகைப்பட தொகுப்பு
Send us your feedback to audioarticles@vaarta.com
தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் சட்டமன்ற தேர்தலில் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில் தமிழ் திரையுலக பிரபலங்கள் பலரும் தங்கள் ஜனநாயகக் கடமையை ஆற்றி வாக்களித்தனர்
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சென்னை ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரியில் வாக்களித்தார்
உலகநாயகன் கமல்ஹாசன் அவர்கள் ஆழ்வார்பேட்டை எல்டாம்ஸ் சாலையில் உள்ள அரசு பள்ளியில் தனது மகள்கள் ஸ்ருதிஹாசன், அக்சராஹாசனுடன் வாக்களித்தார்
தல அஜித் அவர்கள் திருவான்மியூர் வாக்குச்சாவடியில் வாக்களித்தார்
தளபதி விஜய் அவர்கள் நீலாங்கரை வாக்குச் சாவடியில் சைக்கிளில் சென்று வாக்களித்தார்
இதேபோல் நடிக்ர் சிவகுமார் மற்றும் அவருடைய மகன்களான சூர்யா, கார்த்தி ஆகியோர் தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்
நடிகர் சிவகார்த்திகேயன் விருகம்பாக்கம் தொகுதியில் தனது வாக்கை பதிவு செய்தார்
நடிகர் விஜய் ஆண்டனி தனது மனைவியுடன் வந்து ஜனநாயக கடமையாற்றினார்
நடிகர் அருண் விஜய் மற்றும் அவரது மனைவி பெற்றோர்களுடன் வாக்களித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது
நடிகர் சத்யராஜ் தனது வாக்கையை அளித்தார்
இயக்குனர் சீனு இயக்குனர் சீனு ராமசாமி இன்று சென்னையில் வாக்களித்தார்
நடிகர் சித்தார்த், நடிகை ரித்விகா ஆகியோர்களும் தங்களுடைய ஜனநாயக கடமை ஆற்றினர்
இயக்குனர் டி ராஜேந்தர் அவர்கள் இன்று தனது வாக்கை செலுத்தினார்
அதேபோல் இயக்குனர் சுசீந்திரன் அவர்களும் தனது வாக்கை பதிவு செய்தார்
தமிழ் திரையுலகின் முன்னணி காமெடி நடிகராகிய யோகிபாபு தனது வாக்கை பதிவு செய்தார்.
சமீபத்தில் கொரோனாவில் இருந்து மீண்ட இயக்குனர் லோகேஷ் கனகராஜ் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார்
நடிகர் பிரசன்னா தனது மனைவி சினேகாவுடன் வாக்களித்தார்.
கவியரசு வைரமுத்து, ஆர்ஜே பாலாஜி உள்ளிட்டோரும் தங்களது வாக்கை செலுத்தினர்
நடிகர் சசிகுமார், நடிகர் விக்ரம் ஆகியோரும் வாக்களித்தார்கள்
நடிகர் நாசர் தனது மனைவியுடன் சென்று வாக்களித்தார்
நடிகர் கருணாகரன் தனது வாக்கை செலுத்தினார்
நடிகை கீர்த்தி சுரேஷ் தனது பெற்றோர் மற்றும் சகோதரியுடன் வாக்கை செலுத்தினார்
நகைச்சுவை நடிகர் சூரி தனது வாக்கை செலுத்தினார்
நடிகர் ஹரீஷ் கல்யாண் தனது ஜனநாயக கடமையை ஆற்றினார் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com
Comments