சிவசங்கர் பாபா பள்ளியின் அங்கீகாரம் ரத்தா? தமிழக அரசுக்கு குழந்தைகள் நல ஆணையம் பரிந்துரை!
- IndiaGlitz, [Wednesday,June 16 2021]
சென்னை அருகே கேளம்பாக்கம் என்ற பகுதியில் சிவசங்கர் பாபா நடத்திவரும் சுசில்ஹரி சர்வதேச பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய குழந்தைகள் நல ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கேளம்பாக்கத்தில் சுஷில் ஹரி சர்வதேச பள்ளியை நடத்தி வரும் சிவசங்கர் பாபா மீது பள்ளி மாணவிகள் பாலியல் குற்றச்சாட்டு கூறியதை அடுத்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப் பட்டது. இதனையடுத்து தலைமறைவான சிவசங்கர் பாபாவை சற்று முன்னர் டெல்லியில் வைத்து சிபிசிஐடி போலீசார் கைது செய்தனர். அவர் இன்று இரவு சென்னைக்கு அழைத்து வரப்படுவார் என்றும் அதன்பின் அவரிடம் விசாரணை நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இந்த நிலையில் சிவசங்கர் பாபாவின் சுஷில் ஹரி பள்ளியில் படித்து வரும் மாணவ மாணவியர்களின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு அந்த பள்ளியின் அங்கீகாரத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், அந்த பள்ளியில் உள்ள மாணவ மாணவிகளுக்கு உரிய மாற்று ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என்றும் குழந்தைகள் நல ஆணையம் தமிழக அரசுக்கு பரிந்துரை செய்துள்ளது. மேலும் பள்ளி கல்வித்துறை உடனடியாக இது குறித்து நடவடிக்கை எடுத்து அந்த பள்ளியை அரசே ஏற்று நடத்த வேண்டும் என்றும் பள்ளிக்கல்வித்துறை மற்றும் தமிழக அரசுக்கு குழந்தைகள் ஆணையம் கோரிக்கை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.