'பிக்பாஸ்' நிகழ்ச்சியில் பங்கேற்கும் 14 பேர் இவர்களா?
Send us your feedback to audioarticles@vaarta.com
தனியார் தொலைக்காட்சி ஒன்றில் உலக நாயகன் கமல்ஹாசன் நடத்தும் 'பிக்பாஸ்' நிகழ்ச்சி நாளை முதல் தொடங்கவுள்ளது. இதற்கென அமைக்கப்பட்டுள்ள தனி செட்டில் 14 பிரமுகர்கள் 100 நாட்கள் தங்கவுள்ளனர். இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகும் 14 பிரமுகர்களாக இவர்கள் எல்லாம் இருந்தால் நிகழ்ச்சி எப்படி இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள்: :
1. அமலாபால்: திரையுலகில் பிசியாக இருக்கும் நடிகை ஒருவர் 100 நாள் தொலைக்காட்சி நிகழ்ச்சியில் நடிப்பது ஆச்சரியமாகத்தான் இருக்கும்.
2. சடகோபன் ரமேஷ்: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர், 'சந்தோஷ் சுப்பிரமணியம்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர்
3. ராய் லட்சுமி: கோலிவுட் திரையுலகின் கவர்ச்சி நடிகை
4. ராதாரவி: பழம்பெரும் வில்லன் மற்றும் குணசித்திர நடிகர்
5. சஞ்சனா ஷெட்டி: 'ரேணிகுண்டா' நாயகியான இவர் ஒருசில தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும் தோன்றியுள்ளார்
6. அமித் ராகவ்: தொலைக்காட்சி சீரியல் நடிகர்
7. சிம்ரன்: கடந்த 2000ஆம் ஆண்டுகளில் பிசி நடிகையாக இருந்தவர், அஜித், விஜய்க்கு ராசியான நடிகை. பிக்பாஸ் நடத்தும் கமல்ஹாசனுடனும் ஒருசில படங்களில் நடித்துள்ளார்
8. உமா ரியாஸ்: குணசித்திர நடிகை
9. ராகவ்: ரஜினியின் 'எந்திரன்' உள்பட ஒருசில படங்களில் நடித்தவர், தொலைக்காட்சி டான்ஸ் நிகழ்ச்சிகளிலும் பங்கேற்றவர்
10. பாலாஜி: காமெடி நடிகர் மற்றும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் தோன்றுபவர்
11. சஞ்சிதா ஷெட்டி: சூது கவ்வும் படத்தின் நாயகி
12. எச்.ராஜா: பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயலாளர். பரபரப்புக்கு பஞ்சமில்லாதவர்
13. ஹேமங் பதானி: இந்திய கிரிக்கெட் அணியில் இடம்பெற்றிருந்த தமிழக வீரர்
14. நாஞ்சில் சம்பத்: அதிமுக தினகரன் அணியின் ஆதரவாளர், சிறந்த பேச்சாளர்
நடிகர்கள், நடிகைகள், அரசியல்வாதிகள், கிரிக்கெட் வீரர்கள் ஆகியோர் அமைந்த இந்த 14 பேர் கூட்டணி நாளை முதல் 100 நாட்கள் 'பிக்பாஸ்' எந்தெந்த விதத்தில் கலந்துகொள்வதையும், இவர்களை எப்படி கமல்ஹாசன் கையாளப்போகிறார் என்பதையும் பார்க்க சுவாரஸ்யமாகத்தான் இருக்கும்.
ஆனால் இது எமது விருப்பப் பட்டியல்தான். நிஜமாக இந்த நிகழ்ச்சியில் பங்கேற்கப் போகும் 14 பிரபலங்கள் யார் யார் என்பதை நாளைதான் தெரிந்துகொள்ள முடியும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Contact at support@indiaglitz.com