சியாச்சின் மலைத்தொடரில் தமிழக ராணுவ வீரர் உயிரிழப்பு!
Send us your feedback to audioarticles@vaarta.com
சமீபத்தில் புல்வாமா பகுதியில் தற்கொலைப்படையை சேர்ந்த தீவிரவாதியின் தாக்குதலுக்கு 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் பலியாகினர். இவர்களில் இரண்டு பேர் தமிழர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த இரண்டு தமிழக ராணுவ வீரர்களின் இழப்பையே இன்னும் தமிழர்களால் ஜீரணிக்க முடியாத நிலையில் இன்று மற்றொரு தமிழக ராணுவ வீரர் உயிரிழந்துள்ளார்.
சியாச்சின் மலை தொடர்களில் பாதுகாப்பு பணியில் தமிழகத்தை சேர்ந்த ராணுவ வீரர் பால்பாண்டி என்பவர் ஈடுபட்டிருந்தபோது கண்காணிப்பு கோபுரத்தின் மீது வீசிய பனிக்காற்றின் காரணமாக தவறி விழுந்து உயிரிழந்தார். இதனால் தமிழகமே சோகக்கடலில் மூழ்கியுள்ளது.
உயிரிழந்த பால்பாண்டி என்ற ராணுவ வீர்ர் மதுரை மாவட்டம் டி.அரசம்பட்டியை சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout
-
Aadhira Megha
Contact at support@indiaglitz.com