'தலைவி' ஓடிடி ரிலீஸ் குறித்த தகவல்!

  • IndiaGlitz, [Thursday,March 25 2021]

பிரபல பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத் நடிப்பில், இயக்குனர் விஜய் இயக்கத்தில் உருவாகியிருக்கும் ’தலைவி’ திரைப்படம் ஏப்ரல் 23ஆம் தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் ரிலீஸாகவுள்ளது என்பது தெரிந்ததே.

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படத்தின் டிரெய்லர் சமீபத்தில் வெளிவந்தது என்பதும் அந்த ட்ரைலர் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. அச்சு அசலாக எம்ஜிஆர் போலவே அரவிந்த்சாமியும் ஜெயலலிதா போலவே கங்கனா ரணாவத் இந்த படத்தில் இருப்பதாக டிரைலரை பார்த்த பலரும் விமர்சனம் செய்தனர் .

இந்த நிலையில் திரை அரங்குகளில் இந்தப் படம் ரிலீசான பிறகு விரைவில் ஓடிடியில் ரிலீசாக உள்ளது இதனை அடுத்து ஓடிடி ரிலீஸ் உரிமை குறித்த தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. தமிழ் மற்றும் தெலுங்கில் ’தலைவி’ திரைப்படம் அமேசான் பிரைம் வீடியோவிலும், ஹிந்தியில் நெட்பிளிக்ஸ் ஓடிடியிலும் வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.

ஆனால் அதே நேரத்தில் திரையரங்குகளில் வெளியாகி எத்தனை நாட்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்பது குறித்த தகவல் இன்னும் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

More News

பின்னணி பாடகி பி.சுசீலாவுக்கு சிறப்பு விருது: வீட்டிற்கு சென்று வழங்கி கெளரவம்!

பிரபல பின்னணி பாடகி பி சுசிலாவுக்கு சிறப்பு கலைமாமணி விருது வழங்கப்பட்டது என்பதும் இந்த விருதை அவருடைய வீட்டுக்குச் சென்று இயல் இசை நாடக மன்றத்தின் அதிகாரி வழங்கி கவுரவித்தார்

தமிழகத்தில் மீண்டும் எகிறும் கொரோனா பாதிப்பு: இன்றைய பாதிப்பு எவ்வளவு

தமிழகத்தில் கடந்த மாதம் வரை கொரோனா பாதிப்பு கட்டுக்குள் இருந்த நிலையில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு மிக அதிகமாகி வருகிறது.

இஸ்லாமியருடன் கோவிலில் தரிசனம் செய்த கோவை திமுக வேட்பாளர்...!

கோவையில் திமுக கட்சியினர் சார்பாக வேட்பாளராக போட்டியிடும், பையா (எ) கிருஷ்ணன் சமீபத்தில் கூட்டணி கட்சியினருடன் சென்று வாக்கு  சேகரிப்பில் ஈடுபட்டார். 

சரமாரியாக கேள்வி கேட்ட சிறுமிக்கு சளைக்காமல் பதில் சொன்ன குஷ்பு!

நடிகை குஷ்பு சமீபத்தில் பாஜகவில் இணைந்த நிலையில் அவருக்கு ஆயிரம் விளக்கு தொகுதியில் வரும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கிடைத்துள்ளது.

நடிகை கங்கனாவுக்கு ஜாமீன் வழங்கிய நீதிமன்றம்: எந்த வழக்கில் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகையும் தமிழில் 'தலைவி' என்ற திரைப்படத்தின் நாயகியுமான கங்கனா ரனாவத்துக்கு மும்பை நீதிமன்றம் ஜாமீன் வழங்கியுள்ளது