தமிழிலும் இந்தியிலும் பிசியான வடிவேலு நாயகி

  • IndiaGlitz, [Sunday,September 06 2015]

வடிவேலு ஹீரோவாக நடித்த 'தெனாலிராமன்' படத்தில் நாயகியாக நடித்த நடிகை மீனாட்சி தீக்சித், சமீபத்தில் ஒரு தமிழ் படத்திலும், இந்தி படம் ஒன்றிலும் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

இயக்குனர் மணிஷர்மா இயக்கவுள்ள பேய்ப்படம் ஒன்றில் நடிக்க மீனாட்சி தீக்சித் ஒப்பந்தமாகியுள்ளார். மீனாட்சி இதுகுறித்து கூறியபோது, "இந்த படம் ஒரு பேய்ப்படமாக இருந்தாலும் நான் இந்த படத்தில் பேயாக நடிக்கவில்லை எனக்கு இந்த படத்தில் வித்தியாசமான ஒரு புதுமையான வேடம். கண்டிப்பாக ஆடியன்ஸ் என்னுடைய கேரக்டரை ரசிப்பார்கள். பிரபல தெலுங்கு நடிகர் பரத் ரெட்டி இந்த படத்தில் ஹீரோவாக நடிக்கின்றார்' என்று கூறினார்.

மேலும் மீனாட்சி தீக்சித், இந்தியிலும் ஒரு படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ரந்தீப் ஹூடா ஹீரோவாக நடிக்கும் இன்னும் டைட்டில் வைக்கப்படாத படம் ஒன்றில் நாயகியாக மீனாட்சி நடித்து வருவதாகவும் இந்த படத்தை சயீத் அஹ்மது அஃபசல் இயக்கி வருவதாகவும் கூறப்படுகிறது. முழுக்க முழுக்க இளம் நடிகர்கள் மற்றும் புதுமுகங்கள் நடிக்கும் இந்த படம் ஒரு ஜாலியான யூத் படம் என்று கூறப்படுகிறது.

More News